ஆப்நகரம்

Ajith : திடீரென்று மனம் மாறிய அஜித்: ஏ.கே. 62 பட மொத்த பிளானும் மாறுதாம்

AK 62 update: அஜித் குமார் தன் முடிவை மாற்றிக் கொண்டதால் ஏ.கே. 62 படம் தொடர்பாக அனைத்தும் மாறுவதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

Authored byஷமீனா பர்வீன் | Samayam Tamil 26 Mar 2023, 9:27 am
Ajith Kumar movie AK 62: ஏ.கே. 62 பட அறிவிப்பு வெளியாகாமல் இருக்கும் இந்த நேரத்தில் அஜித் மனம் மாறிவிட்டார் என்று கூறப்படுகிறது.
Samayam Tamil ak62 update ajith kumar changes his mind
Ajith : திடீரென்று மனம் மாறிய அஜித்: ஏ.கே. 62 பட மொத்த பிளானும் மாறுதாம்


​ஏ.கே. 62​

துணிவு படத்தை அடுத்து அஜித் குமார் நடிக்கவிருக்கும் படத்தை தற்போதைக்கு ஏ.கே. 62 என்று அழைக்கிறார்கள். அந்த படத்தை மகிழ்திருமேனி இயக்கவிருக்கிறார். அனிருத் இசையமைக்கிறார். லைகா நிறுவனம் தயாரிக்கும் ஏ.கே. 62 படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை. இந்நிலையில் தான் புது தகவல் வெளியாகியிருக்கிறது.

​திட்டம்​

ஃபைனல் ஸ்க்ரிப்ட்டை மார்ச் மாதத்திற்குள் முடிக்க வேண்டும் என மகிழ்திருமேனியிடம் கூறியிருந்தாராம் அஜித். ஏ.கே. 62 பட வேலையை முடித்துவிட்டு தன் ஸ்போர்ட்ஸ் பைக்கில் உலகம் சுற்ற நினைத்தார். இந்நிலையில் அஜித்தின் அப்பா சுப்ரமணமியம் இறந்துவிட்டார். தந்தையை இழந்து வாடும் அஜித் தன் பைக் டூர் திட்டத்தை ஒத்தி வைத்துவிட்டாராம்.

Ajith: பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டிருந்த அப்பா தூக்கத்தில் இறந்தார்: அஜித், சகோதரர்கள் அறிக்கை


​பொறுமை​

நான் தற்போதைக்கு எங்கும் செல்லவில்லை, அவசரப்படாமல் ஏ.கே. 62 ஸ்க்ரிப்ட்டை தயார் செய்யுங்கள் என மகிழ்திருமேனியிடம் கூறியிருக்கிறாராம் அஜித். அதனால் பட வேலையை பொறுமையாக செய்யப் போகிறார்களாம். இதனால் ஏ.கே. 62 படம் குறித்த அறிவிப்பு மார்ச் மாதம் வெளிவராதாம். முன்னதாக மார்ச் மாதம் அறிவிப்பை வெளியிட்டு ஏப்ரலில் படப்பிடிப்பை துவங்க திட்டமிட்டார்கள். தற்போது அந்த திட்டம் கைவிடப்பட்டுள்ளதாம்.

​ஏப்ரல்​

ஏப்ரல் மாதம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடலாம் என்று இருக்கிறதாம் லைகா நிறுவனம். தந்தையை இழந்த அஜித்தை உடனே படப்பிடிப்புக்கு வருமாறு கூற விரும்பவில்லையாம். அதனால் அவர் எப்பொழுது ரெடி என்று சொல்கிறாரோ அப்பொழுது படப்பிடிப்பை துவங்குவார்களாம். மே மாதம் படப்பிடுப்பு துவங்கலாம் என்று கூறப்படுகிறது.

​இயக்குநர்​

ஏ.கே. 62 படத்தை முன்னதாக விக்னேஷ் சிவன் இயக்குவதாக இருந்தது. ஆனால் அவரின் கதை பிடிக்கவில்லை என்று கூறி கடந்த ஜனவரி மாதம் அவரை நீக்கிவிட்டார்கள். இதையடுத்தே மகிழ்திருமேனியை ஒப்பந்தம் செய்தார்கள். விக்னேஷ் சிவனுக்கு பதில் விஷ்ணுவர்தனை ஒப்பந்தம் செய்ய விரும்பினாராம் அஜித். ஆனால் விஷ்ணுவர்தன் வேறு பட வேலைகளில் பிசியாக இருப்பதால் டேட்ஸ் கொடுக்க முடியவில்லையாம்.

AK62 Ajith: விக்னேஷ் சிவனுக்கு பதில் வாரிசு இயக்குநரை கேட்ட அஜித்: டேட்ஸ் இல்ல தலனு கைவிரிச்சுட்டாராம்

​லியோ​

ஏ.கே. 62 பட வேலையை விறுவிறுப்பாக நடத்தி விஜய்யின் லியோ படத்துடன் ரிலீஸ் செய்ய வேண்டும் என மகிழ்திருமேனியிடம் அஜித் கூறியதாக பேச்சு கிளம்பியது. ஆனால் இன்னும் படப்பிடிப்பே துவங்காத நிலையில் ஏ.கே. 62 லியோவுடன் சேர்ந்து வர வாய்ப்பே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே அஜித் அப்பா இறந்த செய்தி அறிந்த விஜய் அவரின் வீட்டிற்கு சென்று ஆறுதல் கூறினார்.

Ajith:அப்பா மரணம்: நண்பர் அஜித் வீட்டிற்கு சென்று ஆறுதல் கூறிய விஜய்

எழுத்தாளர் பற்றி
ஷமீனா பர்வீன்
டிஜிட்டல் ஊடகத்தில் தமிழ் சமயம் ஊடகத்தில் சினிமா செய்திகளை அளித்து வருகிறார். ஆங்கில இலக்கியத்தில் முதுகலை பட்டம் பெற்றவர். முன்னதாக நாட்டு நடப்பு, லைஃப்ஸ்டைல், ஸ்போர்ட்ஸ் செய்திகள் அளித்தவர்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்