ஆப்நகரம்

விக்ரம் குமார் இயக்கத்தில் அகில்!

நடிகர் அகில், இயக்குனர் விக்ரம் குமார் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார்.

TNN 4 Mar 2017, 4:11 pm
நடிகர் அகில், இயக்குனர் விக்ரம் குமார் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார்.
Samayam Tamil akhil in vikram kumars direction
விக்ரம் குமார் இயக்கத்தில் அகில்!


நாகார்ஜுனாவின் இளைய மகன் அகில். அகிலுக்கும்& ஸ்ரேயா பூபலுக்கும் நடக்க வேண்டிய திருமணம் திடீரென நின்று போனது. இதுகுறித்து இருவீட்டாரும் எந்தத் தகவலையும் தெரிவிக்கவில்லை.

இந்நிலையில் அகில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் ஏப்ரல் 1ம் தேதி தொடங்கவுள்ளதாக தெரிகிறது. நாகார்ஜூனா மற்றும் நாகசைதன்யா இணைந்து நடித்த ‘மனம்’ படத்தை இயக்கியவர் விக்ரம் குமார். அவரே தமிழில் நடிகர் சூர்யாவை வைத்து ‘24’ என்ற படத்தை இயக்கினார். இப்படத்திற்கு பின்னர் விக்ரம் குமார் இயக்கவிருக்கும் திரைப்படத்தில் அகில் நடிப்பதாகக் கூறப்பட்டது. இப்படத்தின் பூஜை ஏப்ரல் 1ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதனை தொடர்ந்து முதற்கட்ட படப்பிடிப்புகள் நடைபெறும் என தெரிகிறது. படத்தை நாகார்ஜூனா தனது அண்ணபூர்னா ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கிறார். படத்தில் அகிலுக்கு ஜோடியாக நடிக்கும் கதாநாயகிகளை தேர்வு செய்து வருகிறார் இயக்குனர் விக்ரம் குமார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்