ஆப்நகரம்

கௌதமியை பிரிந்த கமல்ஹாசன் தற்போது எப்படி உள்ளார்? அக்ஷரா ஹாசனின் பளீர் பதில்!

கௌதமியை பிரிந்த கமல்ஹாசன் தற்போது எப்படி உள்ளார்? அக்ஷரா ஹாசனின் பளீர் பதில்!

Samayam Tamil 24 Nov 2016, 7:04 pm
உலக நாயகன் கமல்ஹாசன் மற்றும் நடிகை கௌதமி லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்தார்கள் என்பது அனைவரும் அறிந்தது தான். ஆனால் சமீபத்தில் இருவரும் பிரிவதாக கௌதமி தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்தார். அதனைத்தொடர்ந்து பெரும் வைரலானது அவர்களின் பிரிவு செய்தி. இதற்கு காரணம் என்று பல்வேறு வதந்திகள் பரவியது. ஆனால் நடிகை கௌதமி 2 வருடங்களாக இது குறித்து யோசித்து இந்த முடிவை எடுத்ததாக வதந்திகளுக்கு முற்றிப்புள்ளி வைத்தார்.
Samayam Tamil akshara haasan talks about kamal haasan
கௌதமியை பிரிந்த கமல்ஹாசன் தற்போது எப்படி உள்ளார்? அக்ஷரா ஹாசனின் பளீர் பதில்!


இந்நிலையில் கமல்ஹாசனின் இளைய மகள் அக்ஷரா ஹாசனிடம் இது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அக்ஷரா ஹாசன் ஹிந்தி, தமிழ் என தற்போது வளர்ந்து வரும் நடிகையாக உள்ளார். தனுஷூடன் ஷமிதாப் படத்தில் நடித்து நல்ல பெயரை பெற்ற இவர், தற்போது அஜித்துடன் தல 57 படத்தில் நடித்துவருகிறார். அக்ஷரா டுவிட்டரில் ரசிகர்களுடன் உரையாடும் போது, கௌதமியை பிரிந்த பிறகு தற்போது கமல் எப்படி இருக்கிறார் என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு “சிங்கம் மாதிரி இருக்கிறார்” என்று பதில் கூறியுள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்