ஆப்நகரம்

விக்ரமுக்கு ஜோடியாகப் போகும் அக்ஷராஹாசன்!

கமல்ஹாசனின் மகள் அக்ஷரா ஹாசன், விக்ரமுக்கு ஜோடியாக நடிக்கவுள்ளார்.

Samayam Tamil 3 Apr 2018, 3:22 pm
கமல்ஹாசனின் மகள் அக்ஷரா ஹாசன், விக்ரமுக்கு ஜோடியாக நடிக்கவுள்ளார்.
Samayam Tamil vikram-harasan


கமல்ஹாசனின் மூத்த மகள் ஸ்ருதிஹாசன். இவர் பல மொழி படங்களில் நடித்து வருகிறார். அடுத்ததாக இரண்டாவது மகள் அக்ஷரா ஹாசன், அஜீத்துடன் ‘விவேகம்’ படத்தில் நடித்துள்ளார். அடுத்ததாக விக்ரம் நடிக்கவுள்ள படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கவுள்ளதாக தெரிகிறது.

நடிகர் விக்ரம் தற்போது கௌதம் மேனன் இயக்கத்தில் ‘துருவ நட்சத்திரம்’ படத்தில் நடித்து வருகிறார். அத்துடன் ஹரி இயக்கி வரும் ‘சாமி 2’ படத்திலும் நடித்து வருகிறார். அடுத்ததாக கமல்ஹாசன் தயாரிக்கவுள்ள ஒரு படத்தில் இவர் நடிக்கவுள்ளார். இந்தப் படத்தில்தான் இவருக்கு ஜோடியாக கமல்ஹாசனின் இரண்டாவது மகள் அக்ஷரா ஹாசன் நடிக்கவுள்ளார். இந்தப் படத்தை ராஜேஷ் செல்வா இயக்கவுள்ளார். இதுகுறித்த அதிகார்பூர்வ அறிவிப்பு இன்னும் ஒருசில தினங்களில் வெளியாகவுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்