ஆப்நகரம்

நடிகர் அக்‌ஷய் குமாருக்கு எச்சரிக்கை விடுத்து ராணுவ வீரர்கள் நோட்டீஸ்

ரஸ்டம் படத்தில் பயன்படுத்தப்பட்ட ராணுவ சீரூடை ஏலம் விடப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் மற்றும் அவரது மனைவி ட்விங்கிள் கண்ணாவிற்கு இந்திய ராணுவ வீரர்கள் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

Samayam Tamil 9 May 2018, 7:04 pm
ரஸ்டம் படத்தில் பயன்படுத்தப்பட்ட ராணுவ சீரூடை ஏலம் விடப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் மற்றும் அவரது மனைவி ட்விங்கிள் கண்ணாவிற்கு இந்திய ராணுவ வீரர்கள் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
Samayam Tamil akshay-kumar-twinkle-khanna
நடிகர் அக்‌ஷய் குமார் மனைவி ட்விங்கிள் கண்ணா உடன்


இந்தி சினிமாவில் கடந்த 2016ம் ஆண்டு வெளியான படம் ’ரஸ்டம்’. உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து வெளியான இந்த படத்தில் அக்‌ஷய் குமார் இந்திய கடற்படையின் உயரதிகாரியாக நடித்திருந்தார்.

2016ம் ஆண்டிற்கான தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்ட போது, ’டங்கல்’ படத்திற்காக அமீர் கான் சிறந்த நடிகராக தேர்வு செய்யப்படுவார் என்று தான் இந்தியாவே எதிர்பார்த்தது. ஆனால் அந்தாண்டு ’ரஸ்டம்’ படத்திற்காக சிறந்த நடிகர் தேசிய விருதை அக்‌ஷய் குமார் தட்டிச் சென்றார்.

ரஸ்டம் படத்தில் அக்‌ஷய் குமார்



இந்நிலையில், ரஸ்டம் படத்தில் அக்‌ஷய் குமார் அணிந்து நடித்த கப்பல் படை அதிகாரிக்கான சீருடை ஏலம் விடப்படவுள்ளது. இதற்கான அறிவிப்பை அக்‌ஷய் குமார் மற்றும் ட்விங்கிள் கண்ணா வெளியிட்டுள்ளனர்.

ஏலம் மூலம் கிடைக்கும் தொகையை சமூகநலன் சார்ந்த காரியங்களுக்கு பயன்படுத்த இந்த ஸ்டார் தம்பதிகள் முடிவு செய்துள்ளனர். மே 26ம் தேதியோடு ஏலம் முடிவடைய உள்ள நிலையில், அந்த சீருடையை ஒருவர் ரூ. 2,35,000 ஏலம் கோரியுள்ளார்.

தற்போது இந்த ஏலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 11 ராணுவ வீரர்கள், 7 ஓய்வு பெற்ற அதிகாரிகள் உள்ளிட்ட 21 பேர், நடிகர் அக்‌ஷய் குமார் மற்றும் அவரது மனைவி ட்விங்கிள் கண்ணாவிற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். அதில் ராணுவ வீரர்களின் உணர்வுகளோடு விளையாடவேண்டாம் என்றும், ஏலத்தை நிறுத்தாவிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்