ஆப்நகரம்

5 நாளில் ரூ.75 கோடி வசூல், வித்தியாசமாக நன்றி தெரிவித்த அக்‌ஷய்

ருஸ்தம் வெற்றியைத் தொடர்ந்து ரசிகர்களுக்கு வித்தியாசமாக நன்றி தெரிவித்த அக்‌ஷய் குமார்

TNN 19 Aug 2016, 6:00 am
டினு சுரேஷ் தேசாய் இயக்கத்தில், நீரஜ் பாண்டே தயாரிப்பில் அக்ஷய் குமார் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் ’ருஸ்தம்’. கடற்படைஅதிகாரியின் வாழ்க்கையை சித்தரிக்கும் விதமாக இப்படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது. இதில் அக்ஷய் குமார் கடற்படை அதிகாரியாகவும், இலியானா, அக்ஷய் குமாரின் மனைவியாகவும் நடித்திருக்கின்றனர்.
Samayam Tamil akshay kumar creates beautiful thank you video for rustom movie
5 நாளில் ரூ.75 கோடி வசூல், வித்தியாசமாக நன்றி தெரிவித்த அக்‌ஷய்


அக்ஷய் குமாரின் ஏர்லிப்ட், ஹவுஸ்புல் 3 ஆகிய படங்களின் வெற்றியைத் தொடர்ந்து ருஸ்தம் படத்தின் வெற்றியையும் வித்தியாசமான முறையில் கொண்டாடிவருகிறார். அதுமட்டுமல்லாமல், தன்னுடைய ரசிகர்களுக்கு பாடலின் மூலம் நன்றியினை தெரிவித்துள்ளார். அந்தப் பாடலில் இந்த ஆண்டு வெளிவந்த, வெளிவரும் படங்களின் நடிகர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

ஒரு வளையத்தை தன்னுடைய உடலில் சுற்றிக்கொண்டு ஹூலா ஹூப் பாடலை பாடியுள்ளார். கடந்த 12ம் தேதி வெளிவந்த ருஸ்தம் படம் கிட்டத்தட்ட ரூ.75 கோடி வரை வசூல் படைத்துவிட்டது என்கிறது தகவல்.



அடுத்த செய்தி

டிரெண்டிங்