ஆப்நகரம்

ரஜினிகாந்தை மெர்சலாக்கும் ராட்சச அக்‌ஷய் குமார் - இது 2.0 லேட்டஸ்ட் ப்ரோமோ!

சென்னை: 2.0 திரைப்படத்தின் புதிய ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது.

Samayam Tamil 23 Nov 2018, 1:10 pm
நடப்பாண்டில் மிகவும் எதிர்பார்க்கப்படும் படமாக 2.0 திரைப்படம் இருக்கிறது. இதில் ரஜினிகாந்த், அக்‌ஷய் குமார், எமி ஜாக்சன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படம் குறித்து சமூக வலைத்தளங்களில் ஏராளமான தகவல்கள் பகிரப்பட்டு வருகின்றன.
Samayam Tamil Akshay


வரும் நவம்பர் 29, 2018ஆம் தேதி திரையில் வெளியாகிறது. கடந்த 2010ஆம் ஆண்டு வெளியான எந்திரன் படத்தின் தொடர்ச்சியாக 2.0 உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் ரஜினிகாந்த் விஞ்ஞானியாகவும், ரோபோவாகவும் நடித்துள்ளார்.

தமிழில் முதல் முறையாக அக்‌ஷய் குமார் நடிக்கிறார். இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய ப்ரோமோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ரஜினிக்கு எதிராக பிரம்மாண்ட சிறகுகளை அக்‌ஷய் விரிக்கிறார்.

5ஆம் ஆற்றல் இன்னும் 6 நாட்களில் வெளிவரப் போகிறது என்று பதிவிட்டுள்ளார். இப்படத்திற்கு அட்வான்ஸ் புக்கிங் சூடு பிடித்துள்ளது. ரிலீஸுக்கு முன்பாகவே ரூ.120 கோடியை வசூல் செய்துள்ளது.
View this post on Instagram The Fifth Force is on its way in 6 days! #2Point0FromNov29 @2Point0Movie @DharmaMovies @lyca_productions #2Point0 A post shared by Akshay Kumar (@akshaykumar) on Nov 22, 2018 at 9:30pm PST

ஷங்கரின் இயக்கத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையில் 2.0 படத்தைக் காண அனைவரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்