ஆப்நகரம்

நான் சிறுவயது முதலே அவரை காதலிக்கத் தொடங்கிவிட்டேன்: பிரபல நடிகை!

என்னுடைய 11 வயதிலேயே ரன்பீரை காதலிக்கத் தொடங்கி விட்டேன் என்று பிரபல நடிகை ஆலியா பட் தன்னுடைய ஆழமான காதலை வெளிப்படுத்தியுள்ளார்.

Samayam Tamil 4 Jan 2019, 3:13 pm
பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை ஆலியா பட். இவர் டீனேஜில் இருக்கும் போதே இளம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர். தற்போது இவர் பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வரும் ரன்பிர் கபூரை காதலித்து வருகிறார்.
Samayam Tamil aliabatt


இது பற்றி ஆலியா பட் கூறுகையில், “நான் முதன்முதலில் ரன்பீரை 11 வயதில் இருக்கும்போது தான் பார்த்தேன். அப்போதே அவரை நான் காதலிக்கத் தொடங்கி விட்டேன். தினமும் அவரின் புகைப்படங்களை பார்த்துக்கொண்டே இருப்பேன்” என கூறியுள்ளார்.

ஆலியா பட்டுக்கும், ரன்பீர் கபூருக்கும் 11 வருட வயது வித்தியாசம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்