ஆப்நகரம்

ராஜமௌலியின் RRR படத்திலிருந்து வெளியேறும் ஆலியா பட்?

ராஜமெளலி படத்தில் ஒரு சிறிய ரோலில் நடிக்கவே பட ஹீரோயின்கள் வெயிட்டிங். ஆனால் அந்த வாய்ப்பை பாலிவுட் நடிகை ஆலியா பட் பயன்படுத்தாமல் வெளியேறுகிறார் என செய்தி பரவி வருகிறது.

Samayam Tamil 19 Mar 2020, 6:11 pm
பாகுபலி படத்தின் இரண்டு பாகங்களும் மிகப்பெரிய ஹிட் ஆனது. தென்னிந்தியா மட்டுமின்றி ஹிந்தியிலும் அதிகம் வசூலித்தது அது. அதை தொடர்ந்து தற்போது ஆர்ஆர்ஆர் என்ற படத்தினை இயக்கி வருகிறார் ராஜமௌலி.
Samayam Tamil Alia Bhatt


இதில் ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம் சரண் இருவரும் நடிக்கின்றனர். அது மட்டுமின்றி பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் மற்றும் ஆலியா பட் முக்கிய ரோலில் நடிக்கிறார்கள் என கூறப்பட்டது.

தற்போது படத்தின் 75 சதவீத பணிகள் முடிவடைந்துள்ளதாக கூறப்படுகிறது. தற்போது கொரோனா காரணமாக RRR ஷூட்டிங் நிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் நடிகை ஆலியா பட் இந்த படத்தில் இருந்து வெளியேறவுள்ளார் என செய்திகள் பரவி வருகிறது.

ஆலியா நடித்துவரும் மற்ற படங்களின் ஷூட்டிங்கும் நிறுத்தப்பட்டுள்ளது. அதனால் மீண்டும் ஷூட்டிங் துவங்கியதும் கால்ஷீட் பிரித்து வழங்குவது பெரிய சிக்கலாக இருக்கும். அதனால் ஆர் ஆர் ஆர் படத்தில் இருந்து ஆலியா வெளியேற முடிவெடுத்துள்ளார் என கிசுகிசுக்கின்றனர். ஏனென்றால் இநத படத்தில் தான் ஆலியாவுக்கும் மிகவும் சிறிய ரோல் என காரணமும் கூறுகின்றனர்.

பரவும் செய்தி உண்மையா அல்லது ஆலியா தொடர்ந்து நடிப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். இந்த படத்தின் மூலமாகத்தான் ஆலியா தென்னிந்திய சினிமாவில் அறிமுகமாகவிருந்தார். ஆனால் தற்போது அவர் படத்தில் இருந்து வெளியேறிவிட்டார் என்கிற் செய்தி அவரது ரசிகர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

RRR படம் அடுத்த வருடம் பொங்கல் ஸ்பெஷலாக ஜனவரி 8ம் தேதி ரிலீஸ் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்