ஆப்நகரம்

கன்னட ரீமேக்கில் அல்லு அர்ஜுன்!

நடிகர் அல்லு அர்ஜுன் கன்னட படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிக்கவுள்ளார்.

TOI Contributor 19 Sep 2016, 3:36 pm
நடிகர் அல்லு அர்ஜுன் கன்னட படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிக்கவுள்ளார்.
Samayam Tamil allu arjun in kannada remake
கன்னட ரீமேக்கில் அல்லு அர்ஜுன்!


கன்னட சூப்பர் ஸ்டார்களில் ஒருவர் புனித்ராஜ்குமார். இவர் தற்போது ‘டோட்மனே ஹுட்ஹா’ என்ற படத்தில் நடித்துள்ளார். இவருடன் பிரபல கன்னட நடிகர் அமரீஷும் இணைந்து நடித்துள்ளார். படத்தை இயக்குனர் சூரி இயக்கியுள்ளார். படத்தை கோவிந்த் தயாரித்துள்ளார். இந்தப் படம் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இம்மாதம் 30ம் தேதி திரைக்கு வரவிருக்கிறது.

இதற்கிடையில் இப்படத்தின் தெலுங்கு ரீமேக்கில் அல்லு அர்ஜுனை நடிக்க வைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. படத்தை கதையை கேட்ட அல்லு படத்தில் நடிக்க சம்மதம் கூறியுள்ளார். படத்தின் நாயகியாக பூஜா ஹெக்டே நடிக்கவுள்ளார். மேலும் இந்தப் படத்தில் அம்ரீஷ் கேரக்டரில் சிரஞ்சீவியை நடிக்க வைக்க முயற்சி செய்யப்பட்டு வருகிறது. ‘கபார்சிங்’ படத்தை இயக்கிய ஹரீஷ் சங்கர் இந்தப் படத்தை இயக்கவுள்ளார். இதற்கான ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும் இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்