ஆப்நகரம்

அல்லு அர்ஜுனின் 'புஷ்பா': ஸ்டைலிஷ் ஸ்டார் பிறந்தநாளுக்கு வந்த பிரம்மாண்ட அறிவிப்பு

அல்லு அர்ஜுன் பிறந்தநாள் ஸ்பெஷலாக புஷ்பா படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளிவந்து வைரலாகிக் கொண்டிருக்கிறது.

Samayam Tamil 8 Apr 2020, 11:02 am
நடிகர் அல்லு அர்ஜுனுக்கு தெலுங்கு சினிமா துறையை தாண்டி மற்ற மாநிலங்களிலும் அதிகம் ரசிகர்கள் இருக்கிறார்கள். குறிப்பாக கேரளாவில் அவருக்கு அதிகம் ரசிகர்கள் இருக்கிறார்கள். அவரை மல்லு அர்ஜுன் என்று கூட அழைப்பது உண்டு.
Samayam Tamil Allu Arjun in Pushpa


இன்று அல்லு அர்ஜுனின் 37வது பிறந்தநாள். அதனால் அவரது ரசிகர்கள் அதை சமூக வலைத்தளங்களில் கொண்டாடி வருகின்றனர்.

அந்த கொண்டாட்டத்தை அதிகரிக்கும் விதமாக தற்போது சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கவுள்ள படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. 'புஷ்பா' என பெயரிடப்பட்டுள்ள இந்த படம் தெலுங்கு மட்டுமின்றி தமிழ், ஹிந்தி , மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளிலும் தயாராகிறது.

விஜய் சேதுபதி தான் இந்த படத்தில் வில்லனாக நடிக்கிறார். ஆனால் அது பற்றி அதிகாரபூர்வ அறிவிப்பு தற்போது வெளியிடப்படவில்லை.


ஆர்யா மற்றும் ஆர்யா 2 ஆகிய படங்களுக்கு பிறகு அல்லு அர்ஜுன் மற்றும் சுகுமார் இணையும் மூன்றாவது படம் இது. அதனால் 'புஷ்பா' மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகம் உள்ளது.

ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடிக்கிறார். தேவி ஸ்ரீ பிரசாத் இந்த படத்திற்கு இசையமைக்கவுள்ளார் என்றும் அறிவித்துள்ளனர்.

ஶ்ரீமந்துடு, ஜனதா கேரஜ், ரங்கஸ்தலம் போன்ற பல வெற்றி படங்களை தயாரித்த மைத்திரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தான் புஷ்பா படத்தை தயாரிக்கிறது.

புஷ்பா பற்றிய அறிவிப்பால் மகிழ்ச்சியில் இருக்கும் அல்லு அர்ஜுன் ரசிகர்கள் அதை தேசிய அளவில் ட்விட்டர் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்