ஆப்நகரம்

சிவகார்த்திகேயனுடன் நான் போட்டியா?: விஜய் சேதுபதி!

நடிகர் சிவகார்த்திகேயனுடன் நான் போட்டியிடவில்லை என்று நடிகர் விஜய் சேதுபதி கூறியுள்ளார்.

Samayam Tamil 14 Jul 2018, 4:57 pm
நடிகர் சிவகார்த்திகேயனுடன் நான் போட்டியிடவில்லை என்று நடிகர் விஜய் சேதுபதி கூறியுள்ளார்.
Samayam Tamil siva vijay si


தமிழ் சினிமாவில் அதிக படங்களை கையில் வைத்திருக்கும் ஒரே நடிகர் விஜய் சேதுபதி. இவரை ரசிகர்கள் அன்புடன் ‘மக்கள் செல்வன்’ என்று அழைத்து வருகிறார்கள். விஜய் சேதுபதி தலைக்கனம் இல்லாத ஒரு நடிகர் இவரை சினிமாவில் உள்ளவர்களுக்கும் பிடிக்கும். இவர் தமிழ் உட்பட தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் விஜய் சேதுபதி சமீபத்தில் ஒரு மலையாள சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார். அந்தப் பேட்டியில் கேட்ட கேள்வி, சிவகார்த்திகேயனுடன் உங்களுக்கு போட்டியா? என்றனர். அதற்கு விஜய் சேதுபதி, ‘‘ஏங்க சிவகார்த்திகேயன் மார்க்கெட் எங்க இருக்குது, என் மார்க்கெட் எங்க இருக்குது. மலையோடு மடுவை ஒப்பிடக்கூடாது.
அவர் என்னை விட பல மடங்கு மேலே உள்ளார். என்னுடன் அவரை இணைத்து கீழே இறக்கி வருகிறீர்கள், கண்டிப்பாக அவர் என்னை விட மேல் தான்’’ என வெளிப்படையாக சிவகார்த்திகேயனை பெருமையாக கூறினார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்