ஆப்நகரம்

வருவதெல்லாம் டபுள் ஹீரோயின் படமாம்? வருத்தத்தில் அனுபமா!

வருவதெல்லாம் டபுள் ஹீரோயின் படமாக இருப்பதால் நடிகை அனுபமா வருத்தத்தில் இருக்கிறாராம்.

TNN 24 Oct 2017, 4:43 pm
வருவதெல்லாம் டபுள் ஹீரோயின் படமாக இருப்பதால் நடிகை அனுபமா வருத்தத்தில் இருக்கிறாராம்.
Samayam Tamil am so sad all double heroine movie chance says actress anupama
வருவதெல்லாம் டபுள் ஹீரோயின் படமாம்? வருத்தத்தில் அனுபமா!


நடிகை அனுபமா பரமேஸ்வரன் தமிழில் ‘கொடி’ படம் மூலம் அறிமுகமானார். படத்தில் தனுஷ் ஜோடியாக ‘நடித்தார். இதில் திரிஷா இன்னொரு தனுஷுக்கு ஜோடியாக நடித்திருந்தார். தமிழில் ஒரு படம் மட்டுமே நடித்துள்ள அனுபமாவுக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வரவில்லை. தற்போது தெலுங்கில் பிஸியாக நடித்து வருகிறார். நடிகை அனுபமாவுக்கு தமிழில் டபுள் ஹீரோயின் படங்களில் நடிக்கவே அதிக வாய்ப்பு வருகிறதாம். இது அவருக்கு வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.

சமீபத்தில் அனுபமாவிடம், ‘நீங்கள் நடிக்கும் பெரும்பாலான படங்கள் டபுள் ஹீரோயின் கதையாக இருக்கிறதே என்று கேட்டதற்கு, ’பெரும்பாலான படங்கள் டபுள் ஹீரோயின் கதைகளாக இருந்தாலும் அந்த கதைகள் எல்லாமே ஹீரோவுக்குத்தான் முக்கியத்துவம் உள்ளதாக இருக்கிறது. எனக்கு மட்டுமல்ல அதில் நடிக்கும் மற்றொரு ஹீரோயினாக இருந்தாலும் சரி மற்ற எந்த கேரக்டராக இருந்தாலும் அவர்களுக்கும் சிறிய கேரக்டர்கள் இருக்கும்’’ என்றார் அனுபமா.

இதனால் சமீபகாலமாக சிங்கிள் கதாநாயகியாக வரும் படங்களாகப் பார்த்து தேர்வு செய்து நடிக்க முடிவு செய்துள்ளார் நடிகை அனுபமா பரமேஸ்வரன்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்