ஆப்நகரம்

அஜித் மீதான காதலை வெளிப்படுத்த ரூ.6 கோடி செலவு செய்த பிரபல நடிகர்!

பிரபல நடிகரும், தயாரிப்பாளருமான ஆர்.கே. சுரேஷ், அஜித் மீது தான் வைத்திருக்கும் அபரிமிதமான அன்பை வெளிப்படுத்த ரூ. 6 கோடி செலவு செய்துள்ளார்.

Samayam Tamil 21 Sep 2018, 5:51 pm
பிரபல நடிகரும், தயாரிப்பாளருமான ஆர்.கே. சுரேஷ், அஜித் மீது தான் வைத்திருக்கும் அபரிமிதமான அன்பை வெளிப்படுத்த ரூ. 6 கோடி செலவு செய்துள்ளார்.
Samayam Tamil billa pandi


நடிகர் அஜித்தை உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அவரை எல்லோருக்கும் பிடிக்கும். அதேபோல் அவர் நேசிக்கும் சினிமா துறையில் உள்ளவர்களில் பலர் அவரது தீவிர ரசிகர்களாக இருக்கின்றனர். தற்போது அஜித் ‘விஸ்வாசம்’ படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை சிவா இயக்கி வருகிறார். இந்தப் படம் வரும் பொங்கல் விடுமுறைக்கு வெளியாகிறது.

இந்நிலையில் சினிமா துறையில் உள்ள நடிகரும், தயாரிப்பாளருமான ஆர்.கே. சுரேஷ், அஜித்தின் மிகத் தீவிர ரசிகர். அஜித்துக்காக இவர் ரூ.6 கோடியை செலவழித்துள்ளார். இவர் ‘பில்லா பாண்டி’ என்ற படத்தை தயாரித்து அதில் நடித்திருக்கிறார். இந்தப் படத்தில் ஆர்.கே.சுரேஷ், அஜித்தின் தீவிர ரசிகராக நடித்துள்ளார். அஜித் மீதான காதலை வெளிப்படுத்தவே ரூ. 6 கோடி செலவு செய்து இப்படத்தை எடுத்துள்ளதாக ஆர்.கே.சுரேஷ் கூறியுள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்