ஆப்நகரம்

தடயவியல் நிபுணராக மாறிய நடிகை அமலாபால்!

மீண்டும் நாயகியை மையப்படுத்தும் படம் ஒன்றில் நடிகை அமலாபால் தடயவியல் நிபுணராக நடிக்கிறார்.

Samayam Tamil 2 Jan 2019, 4:08 pm
நடிகை அமலாபால், தற்போது ‘அதோ அந்த பறவை போல’, ‘ஆடை’ உட்பட ஒரு சில படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் மீண்டும் நாயகியை முன்னிலைப்படுத்திய கதையொன்றில் நடிக்க நடிகை அமலாபால் ஒப்பந்தமாகியுள்ளார் அமலாபால். இந்தப் படத்தை அனூப் பணிக்கர் இயக்கவுள்ளார். படத்திற்கு அபிலாஷ் பிள்ளை கதை எழுதியுள்ளார்.
Samayam Tamil amala-payl


இந்தப் படத்தில் நடிகை அமலா பால், தடயவியல் நிபுணராக நடிக்கிறார். தடயவியல் புலனாய்வு த்ரில்லர் பாணியில் ஒரு மர்மமான வழக்கை தீர்க்க, அவர் கையாளும் தனித்துவமான வழிமுறைகளைச் சுற்றி நடக்கும் கதை. இந்தப் படம் ஒரு உண்மை சம்பவத்தின் அடிப்படையில் உருவாகிறது.

கேரள முன்னாள் காவல்துறை மருத்துவர் பி. உமாதத்தன் கையாண்ட ஒரு உண்மையான வழக்கை அடிப்படையாகக் கொண்டது. இவரிடம் இயக்குனர் அனூப் பணிக்கர் மற்றும் அபிலாஷ் பிள்ளை ஆகியோர் பல மாதங்களாக கலந்துபேசி இந்த கதையை உருவாக்கியுள்ளனர்.

இந்தப் படத்தை ஏ.ஜே. பிலிம்ஸ் நிறுவனம் மற்றும் ஒயிட் ஸ்கிரீன் மீடியா இணைந்து தயாரிக்கிறது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் கோவையில் வரும் மார்ச் மாதம் தொடங்கவுள்ளது. இந்தப் படத்தில் அமலாபாலுடன் நடிக்கும் நடிகர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்