ஆப்நகரம்

அஜீத்துடன் இணைய விரும்பும் அமலாபால்!

அஜீத் நடிக்கவிருக்கும் ‘விசுவாசம்’ படத்தில் அஜீத்துக்கு ஜோடியாக நடிக்க அமலா பால் விருப்பம் தெரிவித்துள்ளார்.

TNN 2 Dec 2017, 3:26 pm
அஜீத் நடிக்கவிருக்கும் ‘விசுவாசம்’ படத்தில் அஜீத்துக்கு ஜோடியாக நடிக்க அமலா பால் விருப்பம் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil amalapaul like to act with ajith
அஜீத்துடன் இணைய விரும்பும் அமலாபால்!


தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான அஜீத், விஜய்யுடன் ஜோடி சேர பல நடிகைகளுககும் விருப்பம் இருப்பதுண்டு. ஒரு சில இளம் நடிகைகள் அவர்களுக்கு தங்கையாக கூட நடிக்க தயார் என்று பல பேட்டிகளில் தெரிவித்திருக்கின்றனர்.

இந்த நிலையில் விஜய்க்கு ஜோடியாக ‘தலைவா’ படத்தில் நடித்த நடிகை அமலாபால் தற்போது அஜீத்துடன் நடிக்க வேண்டும் என்று தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார்.
தற்போது அஜீத்தின் 58வது படத்தின் நாயகி தேடுதல் வேட்டை நடந்துவரும் நிலையில் அமலாபால் இப்படி சொல்லியிருக்கிறார். ஒருவேளை அவர்கூட அஜீத்துக்கு ஜோடியாக இருக்கலாம் என்று எண்ணத் தோன்றுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்