ஆப்நகரம்

அஜீத் ரசிகர்களுக்கு பிறந்தநாள் பரிசாக டிஜிட்டலில் வெளியாகும் ‘அமர்க்களம்’!

அஜீத்தின் ரசிகர்களுக்கு பிறந்தநாள் பரிசாக அஜீத் - ஷாலினி நடித்த ‘அமர்க்களம்’ படம் டிஜிட்டலில் வெளியாகவுள்ளது

TNN 26 Apr 2017, 4:17 pm
அஜீத்தின் ரசிகர்களுக்கு பிறந்தநாள் பரிசாக அஜீத் - ஷாலினி நடித்த ‘அமர்க்களம்’ படம் டிஜிட்டலில் வெளியாகவுள்ளது.
Samayam Tamil amarkalam movie will released in digitlized
அஜீத் ரசிகர்களுக்கு பிறந்தநாள் பரிசாக டிஜிட்டலில் வெளியாகும் ‘அமர்க்களம்’!


அஜீத் நடித்த முக்கிய படங்களில் ஒன்று ‘அமர்க்களம்’. இது அஜீத் நடித்த 25வது படம். இதில் நடித்தபோதுதான் ஷாலினியை காதலித்து திருமணம் செய்து கொண்டார் அஜீத். படத்தை சரண் இயக்கியிருந்தார்.

அஜீத், ஷாலினியுடன் ரகுவரன், ராதிகா, நாசர், பூவிலங்கு மோகன், வினு சக்ரவர்த்தி, சார்லி உள்பட பலர் நடித்திருந்தனர். படத்திற்கு பரத்வாஜ் இசையமைத்திருந்தார். 1999ம் ஆண்டு வெளியான இந்தப் படம் அப்போது பெரும் வெற்றி பெற்றது.

பிலிம்மில் உருவான இந்தப் படத்தை டிஜிட்டல் தொழில்நுட்பத்திற்கு மாற்றி ஒலி வடிவத்தை மேம்படுத்தி 18 வருடங்களுக்கு பிறகு மீண்டும் வெளியிடுகிறார்கள். ஏப்ரல் 28ம் தேதி ‘அமர்க்களம்’ படம் வெளியிடப்படுகிறது.
கே.எம்.பிலிம்ஸ் நிறுவனம் இதனை வெளியிடுகிறது. வருகிற மே 1ம் தேதி அஜித் பிறந்த நாள். இதை கொண்டாடும் விதத்தில் ரசிகர்களுக்காக பரிசாக இந்தப் படம் வெளியிடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்