ஆப்நகரம்

வீட்டில் முடங்கியிருப்பவர்கள் செல்வராகவன் சொல்வதை செஞ்சு தான் பாருங்களேன்

கொரோனா லாக்டவுனால் வீட்டில் முடங்கியிருக்கும் மக்களுக்கு செல்வராகவன் போட்ட ட்வீட் ஆறுதலாக உள்ளது.

Samayam Tamil 26 Apr 2020, 9:22 am
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு வரும் மே மாதம் 3ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு உத்தரவால் அன்றாடம் வேலை பார்த்தால் தான் சாப்பாடு என்று இருப்பவர்களின் நிலைமை தான் மோசமாக உள்ளது.
Samayam Tamil selvaraghavan


பணம், உணவு எல்லாம் இருந்தாலும் வீட்டிலேயே முடங்கியிருப்பதால் பலருக்கு மன அழுத்தம் ஏற்பட்டுள்ளது. பெரிய ஊரடங்கு உத்தரவாம், சரிதான் போங்கய்யா என்று வீட்டை விட்டு வெளியேறி ஒரு ரவுண்டு வர வேண்டும் என்கிற எண்ணம் பலருக்கு அவ்வப்போது வருகிறது. சில நேரங்களில் மனது பாடாய்படுத்தி எடுக்கிறது.

கடவுளே, இந்த கொரோனா வைரஸை அழித்து தயவு செய்து எங்களை பழையபடி வாழவை என்று வேண்டாதவர்களே இல்லை. இப்படி கவலை, மன அழுத்தத்தில் பலர் இருக்கும்போது இயக்குநர் செல்வராகவன் போட்ட ட்வீட் பெரிய ஆறுதலாக உள்ளது.

அவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

வாழ்க்கையில் நாம் சந்தோஷமாக இருக்க முடிவு செய்யலாம் அல்லது சோகமாக இருக்க தீர்மானிக்கலாம். சந்தோஷமாக இருப்பதை தேர்வு செய்க. சந்தோஷமாக இல்லாவிட்டாலும் அப்படி இருப்பது போன்று சில நாட்களுக்கு நடியுங்கள். பின்னர் அதுவே பழகிவிடும். நீங்கள் போலியாக சந்தோஷப்படுகிறீர்கள் என்பதே மறந்துவிடும். இறுதியில் சந்தோஷமாக இருக்கத் துவங்கிவிடுவீர்கள். என் அனுபவம் என்று தெரிவித்துள்ளார்.

செல்வராகன் சொல்வதை கடைபிடிப்பது கடினம் தான் என்றாலும் முடியாத காரியம் இல்லை. சும்மா கவலைப்படுவதற்கு செல்வா சொல்வதை தான் செய்து பார்க்கலாமே.
ஆதரவற்றவர்களுக்கு தானே பிரியாணி சமைத்துக் கொடுத்த இமான் அண்ணாச்சி

அடுத்த செய்தி

டிரெண்டிங்