ஆப்நகரம்

Uyarntha Manithan: நான் உயர்ந்த மனிதன் சிவாஜியின் சீடன் - அமிதாப் பச்சன்

நடிகர் சிவாஜி கணேஷனின் சீடன் நான் என பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

Samayam Tamil 4 Apr 2019, 9:32 pm
நடிகர் சிவாஜி கணேஷனின் சீடன் நான் என பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
Samayam Tamil Amitab Bachchan 1


பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் தனது 50 வருட சினிமா வாழ்க்கையில், முதன் முதலாக 'உயர்ந்த மனிதன்' என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகியுள்ளார்.

பாலிவுட்டில் சூப்பர் ஸ்டார் என்றழைக்கப்படும் அமிதாப் பச்சன் கடந்த 1969ம் ஆண்டு முதல் சினிமாவில் தொடர்ந்து நடித்து வருகிறார். ஷாத் ஹிந்துஸ்தானி என்ற பாலிவுட் படத்தின் மூலம் அறிமுகமானார்.

நட்பே துணை சினிமா விமர்சனம்

இதுவரை அவர் நடித்து 50 ஆண்டுகள் ஆன நிலையில், நேரடியாக எந்த தமிழ் படத்திலும் நடிக்கவில்லை. தற்போது அவரது பிங்க் படம் நேரடியாக நேர்கொண்ட பார்வை என்ற தமிழ் படமாக உருவாகி வருகிறது. இந்தப் படம் வரும் ஆகஸ்ட் 10ம் தேதி திரைக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Vijay Sethupathi: விஜய் சேதுபதி குரலில் அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் தமிழ் ட்ரைலர் இதோ.!

சிவாஜியின் சீடன்:
உயர்ந்த மனிதன் படத்தில் எஸ்.ஜே. சூர்யாவுடன் சேர்ந்து நடிக்கும் அமிதாப் பச்சன், படப்பிடிப்பில் எடுத்த புகைப்படத்தை தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அதில் மாஸ்டரின் நிழலில் இரு சீடர்கள் என்றும் அவர்களின் பாதங்களை தொட்டு வணங்குவதாக பதிவிட்டுள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்