ஆப்நகரம்

கருணாநிதி மறைவுக்கு இரங்கல் தெரிவித்த அமிதாப் பச்சன்!

சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த திமுக தலைவர் கருணாநிதி நேற்றுமுன்தினம் காலமானார். அவரது மறைவுக்கு தமிழ்நாடே இருளில் மூழ்கியது போல் காணப்பட்டது

Samayam Tamil 9 Aug 2018, 5:45 pm
சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த திமுக தலைவர் கருணாநிதி நேற்றுமுன்தினம் காலமானார். அவரது மறைவுக்கு தமிழ்நாடே இருளில் மூழ்கியது போல் காணப்பட்டது. மேலும் அவரது மறைவுக்கு ஜனாதிபதி, பிரதமர் மோடி உள்பட அரசியல் கட்சித் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், பொதுமக்கள் மற்றும் தொண்டர்கள்ஆகியோர் இரங்கல் தெரிவித்தார்கள்.
Samayam Tamil கருணாநிதி மறைவுக்கு இரங்கல் தெரிவித்த அமிதாப் பச்சன்!


மேலும் கலைஞர் கருணாநிதியின் உடல் பொதுமக்களின் பார்வைக்காக சென்னை ராஜாஜி அரங்கத்தில் வைக்கப்பட்டிருந்தது. இவரது உடலுக்கு பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் நேரில் அஞ்சலி செலுத்தினார்கள். மேலும் டுவிட்டரில் பல பிரபலங்கள் ஆழந்த இரங்கலை தெரிவித்து வந்தார்கள்.

இந்நிலையில், பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், ‘‘கருணாநிதி சிறந்த தலைவர், அவர் முதலமைச்சராக இருந்த போது நான் அவர் கையால் விருது வாங்கியிருக்கிறேன். அவருக்கு என்னுடைய பிரார்த்தனை மற்றும் இரங்கல்’’ என்று பதிவு செய்திருக்கிறார்

அடுத்த செய்தி

டிரெண்டிங்