ஆப்நகரம்

மகன் தயாரிப்பில் அப்பனுடன் இணையும் பிக் பி!

ராம் சரண் தயாரிப்பில் சிரஞ்சீவி நடிக்கும் படத்தில் அமிதாப்பச்சனும் இணைந்து நடிக்கிறார்.

TNN 7 Aug 2017, 3:35 pm
ராம் சரண் தயாரிப்பில் சிரஞ்சீவி நடிக்கும் படத்தில் அமிதாப்பச்சனும் இணைந்து நடிக்கிறார்.
Samayam Tamil amithab bachan will join with chiranjeevi
மகன் தயாரிப்பில் அப்பனுடன் இணையும் பிக் பி!


நடிகர் சிரஞ்சீவி ‘கைதி எண்-150’ படத்தை அடுத்து தற்போது சுதந்திர போராட்ட தியாகியான உய்யலவாடா நரசிம்ம ரெட்டியின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்கவுள்ளார். இந்தப் படத்தை அவரது மகனும், நடிகருமான ராம்சரண் தயாரிக்கிறார். இந்தப் படம் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தில் நடிக்க சில இந்திய பிரபலங்களிடம் பேச்சுவார்த்தை நடந்து வந்தது.


இந்நிலையில், தற்போது அப்படத்தில் சிரஞ்சீவியுடன் ஒரு முக்கிய வேடத்தில் அமிதாப்பச்சனும் நடிக்கிறார். படத்தின் நாயகியாக நயன்தாராவும் நடிக்கவுள்ளார். அதையடுத்து வில்லனாக கன்னட சூப்பர் ஸ்டார் சுதீப் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
ஏற்கனவே நான் ஈ படத்தில் நடித்து தெலுங்கு ரசிகர்களை கவர்ந்த சுதீப், இந்த படம் மூலம் தெலுங்கு ரசிகர்கள் மத்தியில் இன்னும் பெரிய அளவில் பேசப்படும் நடிகராகிவிடுவார் என்று கூறப்படுகிறது. விரைவில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்