ஆப்நகரம்

எமிஜாக்சன் டுவிட்டால் ரசிகர்கள் அதிர்ச்சி!

இனி மொராக்கோவில் இருந்து திரும்பமாட்டேன் என்று நடிகை எமிஜாக்சன் டுவிட் செய்திருப்பதை கண்டு அவரது ரசிகர்கள் அதிச்சியடைந்துள்ளனர்.

Samayam Tamil 20 Mar 2018, 9:44 pm
இனி மொராக்கோவில் இருந்து திரும்பமாட்டேன் என்று நடிகை எமிஜாக்சன் டுவிட் செய்திருப்பதை கண்டு அவரது ரசிகர்கள் அதிச்சியடைந்துள்ளனர்.
Samayam Tamil supergirl-3x10-saturn-girl


ரஜினியின் 2.0 படத்தில் மிகவித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிகை எமிஜாக்சன் நடித்துள்ளார். அந்த படத்திற்கு பிறகு அவருக்கு அவ்வளவாக தமிழில் படங்கள் இல்லை. கடந்த சில காலங்களாகவே அவர் பாலிவுட்டில் செட்டில் ஆகிவிட்டார். மேலும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் லண்டன் சென்று அங்கே நடக்கும் மாடலிங் ஷோக்களில் பங்கேற்று வந்தார்.


சமீபத்தில் லண்டனில் நடந்த ஃபேஷன் ஷோவில் பங்கேற்க முடியாதது குறித்தும் அவர் கவலைத் தெரிவித்திருந்தார். சென்னை மற்றும் மும்பையில்அவருக்கு சொந்தமாக வீடுகள் உள்ளன. அவர் எங்கு நடிக்கிறாரோ அதற்கு தக்க அந்த வீடுகளை பயன்படுத்தி வந்தார்.

இந்நிலையில், அவர் தற்சமயம் வடக்கு ஆப்ரிக்க நாடான மொராக்கோவிற்கு பயணம்செய்திருந்தார். அங்கே உள்ள அழகிய காட்சிகளைக் கண்ட அவர் அங்கேயே செட்டில் ஆக முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது. இது தொடர்பாக ஒரு சிறு வீடியோவை தன் டுவிட்டர் பக்கத்தில் எமி வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது ‘நான் என்ன சொல்ல வருகிறேன் என்றால் நான் மொராக்கோவிற்கு குடியேற இருக்கிறேன், இனிமேல் திரும்ப போவதில்லை என்று கூறியுள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்