ஆப்நகரம்

ஜாக்கிசானுடன் நடிக்கும் அமிரா, திஷாபாட்னி!

ஜாக்கிசானுடன் ‘குங்பு யோகா’ என்ற படத்தில் நடிகைகள் அமிரா மற்றும் திஷா பாட்னி ஆகியோர் நடித்து வருகின்றனர்.

TOI Contributor 26 Feb 2016, 9:43 pm
ஜாக்கிசானுடன் ‘குங்பு யோகா’ என்ற படத்தில் நடிகைகள் அமிரா மற்றும் திஷா பாட்னி ஆகியோர் நடித்து வருகின்றனர்.
Samayam Tamil amyra dastur and thishapatni are acting with jackie chan
ஜாக்கிசானுடன் நடிக்கும் அமிரா, திஷாபாட்னி!

தமிழில் ‘அனேகன்’ படத்தில் நடித்தவர் அமிரா தஸ்தர். இவர் நடிகர் ஜாக்கிசானுடன் ‘குங்பு யோகா’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்காக அமைரா குங்கு பயிற்சி எடுத்தார். அவர் பல ஆக்ஷன் காட்சிகளில் நடித்துள்ளார். மேலும் இந்தப் படத்திற்கு இன்னொரு நாயகி தேவைப்பட்டது. இதற்காக பலருக்கும் வலைவீசப்பட்டது.
தேர்ந்தெடுக்கும் கதாநாயகிக்கு ஜிம்னாஸ்டிக் தெரிந்திருக்க வேண்டும். அதற்காக டைரக்டர் ராம் கோபால் வர்மா இயக்கிய ‘லோபர்’ படத்தில் நடித்த திஷா பாட்னிதான் இந்த கேரக்டருக்கு பொருத்தமாக இருக்கும் என்று அவரை புக் செய்தனர்.
இவருக்கும் ஜிம்னாஸ்டிக் எல்லாம் தெரியும். மேலும் இவர் மார்ஷல் கலை மற்றும் குங்ஃபு சண்டையும் கற்றுள்ளார். படத்தில் புதையல் ஒன்றை தேடி திபெத்துக்கு செல்லும் ஜாக்கி சானுக்கு உதவும் தொல்லியல் ஆய்வாளராக திஷா நடிக்கிறார். ஜாக்கியுடன் நடிக்கும் சோலோ ஹீரோயின் அந்தஸ்த்தை பெற்ற குஷியில் இருந்த அமிராவுக்கு, தற்போது அப்படத்தில் திஷாவும் இணைந்திருப்பதால் இருவருக்கும் நடிப்பில் போட்டி அதிகரித்துள்ளதாம்.

அடுத்த செய்தி

Tamil News App:
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக்பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்
டிரெண்டிங்