ஆப்நகரம்

Soppana Sundari: ஆபாச ஆடையுடன் வரும் சொப்பன சுந்தரியை தடை செய்ய வேண்டும்: சமூக ஆர்வலர் புகார்!

சன் லைஃப் தொலைக்காட்சி சேனலில் ஒளிபரப்பாகும் சொப்பன சுந்தரி நிகழ்ச்சி மிகவும் ஆபாசமாக உள்ளது என்றும், அந்த நிகழ்ச்சி ஒளிபரப்புவதை நிறுத்த வேண்டும் என்றும் சமூக ஆர்வலர் ஒருவர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

Samayam Tamil 27 Nov 2018, 4:26 pm
சன் லைஃப் தொலைக்காட்சி சேனலில் ஒளிபரப்பாகும் சொப்பன சுந்தரி நிகழ்ச்சி மிகவும் ஆபாசமாக உள்ளது என்றும், அந்த நிகழ்ச்சி ஒளிபரப்புவதை நிறுத்த வேண்டும் என்றும் சமூக ஆர்வலர் ஒருவர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
Samayam Tamil kam


சன் லைஃப் தொலைக்காட்சியில் மாடல் அழகிகள் கலந்து கொண்டுள்ள நிகழ்ச்சி சொப்பன சுந்தரி. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு போட்டியாக இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. சனி மற்றும் ஞாயிறுதோறும் இரவு 9 மணிக்கு இந்த சொப்பன சுந்தரி நிகழ்ச்சி ஒளிபரப்பு செய்யப்படுகிறது. இந்த நிகழ்ச்சியை நடிகர் பிரசன்னா தொகுத்து வழங்கி வருகிறார்.


டைட்டிலுக்கு ஏற்ப, நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள இளம் பெண்கள் ஆபாசமாக உடை அணிவதுடன், ஆண்களின் உணர்ச்சியை தூண்டும் வகையில் அவர்கள் முகபாவனை செய்கிறார்கள். ஆபாசம் மட்டுமல்ல நிகழ்ச்சியில் சண்டை, சச்சரவுக்கும் குறைவே இல்லை. பாவாடை, தாவணி, சேலை போன்றவற்றிற்கு பெயர் போன நம் தமிழகத்தில் இப்படி அரைகுறை ஆடையுடன் இளம் பெண்கள் இருக்கும் சொப்பன சுந்தரி நிகழ்ச்சியை பார்த்து பலரும் கொந்தளித்துள்ளனர்.


இதில் ஒருவரான கீழ்ப்பாக்கம் கார்டன் காலனியைச் சேர்ந்தவர் சமூக ஆர்வலர், கன்யா தேவி சொக்குகுலா (36). இவர், சென்னை, போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது: பழங்களால் உடல் பாகங்களை மறைக்கும் அளவிற்கு ஆபாசமாகவும், அரை நிர்வாணமாகவும் உடை அணிந்துள்ளார்கள். கடந்த ஜூன் மாதம் 13ம் தேதி முதல் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது.

இந்நிகழ்ச்சி பொதுமக்கள் மற்றும் குழந்தைகளின் நல்வாழ்வை சீர்குலைக்கும் வகையில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது. நான் அனைத்து இந்திய இயக்கத்திற்கான சேவைப் பிரிவில் மேலாளராகவும், துணை நிறுவனராகவும் பணியாற்றி வருகிறேன். இதன் மூலம், பலரும் என்னிடம் இந்நிகழ்ச்சி குறித்து விமர்சனம் செய்து வருகிறனர். இதன் காரணமாக, இந்நிகழ்ச்சி உடனடியாக நிறுத்த சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறியுள்ளார். அதோடு, இந்த சேனலில் இந்த நிகழ்ச்சியை தூக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்