ஆப்நகரம்

குடும்ப பெண்ணாக இருந்த ரம்யா தற்போது கவர்ச்சிக்கு மாறிய காரணம் என்ன?!

சின்னத்திரையில் குடும்ப பெண்ணாக வரும் விஜெ ரம்யா தற்போது கவர்ச்சிக்கு மாறியுள்ள காரணம் புரியாமல் ரசிகர்கள் திணறி வருகின்றனர்.

Samayam Tamil 29 Nov 2018, 7:33 pm
சின்னத்திரை தொகுப்பாளர்களில் மிகவும் பிரபலமானவர்களில் ஒருவர்தான் ரம்யா. இவர் சினிமாவிலும் பல படங்களில் நடித்து வருகிறார். மேலும் இவர் ‘சங்கத்தலைவன்’ என்ற படத்தில் ஹீரோயினியாக நடித்து வருகிறார். இந்தப் படத்தில் சமுத்திரக்கனி ஹீரோவாக நடித்துள்ளார். மேலும் படத்தில் கருணாஸ், நடிகை சுனுலட்சுமி உட்பட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தை மணிமாறன் இயக்கி வருகிறார். வெற்றிமாறன் தயாரித்துள்ளார்..
Samayam Tamil ரம்யா


விஜெ. ரம்யா ஆரம்பத்தில் இருந்தே அவர் எப்போதும் குடும்பப்பாங்கான உடைகளை மட்டுமே அணிந்து புகைப்படங்கள் வெளியிட்டு வந்தார். சினிமாவில் கால் பதித்த பிறகு தற்போது கவர்ச்சி உலகத்திற்கு மாறியுள்ளார். நேற்று அவர் மிக குட்டையாக உடை அணிந்து புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார். அது அவரது ரசிகர்களுக்கே ஆச்சர்யம் அளித்துள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்