ஆப்நகரம்

சின்னத்திரையில் ஆண்ட்ரியா!

சின்னத்திரையில் நடுவராக களமிறங்கியுள்ளார் நடிகை ஆண்ட்ரியா.

TOI Contributor 20 May 2016, 3:39 pm
சின்னத்திரையில் நடுவராக களமிறங்கியுள்ளார் நடிகை ஆண்ட்ரியா.
Samayam Tamil andrea jeremiah in television serial
சின்னத்திரையில் ஆண்ட்ரியா!


நடிகைகள் பலரும் சினிமாவில் மார்க்கெட் போனவுடன் செல்லும் இடம் சின்னத்திரை.இங்கு சீரியல் அல்லது ரியாலிட்டி ஷோக்களில் நடுவராக களமிறங்கிவிடுவர். அந்தவகையில் குஷ்பு, ராதா, நமிதா, லேட்டஸ்ட் ப்ரியாமணி வரிசையில் நடிகை ஆண்ட்ரியாவும் இணைந்துள்ளார்.

சூப்பர்சிங்கர், சன்சிங்கர் பாணியில் வேந்தர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் வி-வாய்ஸ் என்ற இசை நிகழ்ச்சியின் நடுவராக பங்கேற்கிறார்.ஆண்ட்ரியா நடிகை மட்டுமல்லாது பல படங்களில் பாடகியாகவும் வலம் வருவதால் இந்த அவதாரம் எடுத்துள்ளார். இவருடன் நடுவர்களாக பாடகர்கள் நரேஷ் ஐயர், பிரசன்னாவும் கலந்து கொள்கின்றனர்.

இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக சமீபத்தில் கின்னஸ் விருது பெற்ற பாடகி பி.சுசிலாவும் கலந்துகொள்கிறார்.ஆண்ட்ரியாவுக்கு இது நம்ம ஆளு, தரமணி, விஸ்வரூபம் 2 படங்கள் ரிலிசுக்கு காத்திருக்கிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்