ஆப்நகரம்

வெற்றிமாறன் படத்தில் மீண்டும் ஆண்ட்ரியா?

ஆண்ட்ரியா மீண்டும் வெற்றிமாறன் படத்தில் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Samayam Tamil 21 Mar 2020, 3:15 pm
வடசென்னை படத்தில் ஆண்ட்ரியா மிக அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அவரின் கதாபாத்திரம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைக்கப்பட்டிருந்தது. அவரும் நடிப்பில் மிரட்டியிருந்தார். எனினும் குறிப்பிட்ட ஒரு காட்சியில் நடித்ததை நினைத்து வருத்தப்பட்டார். இந்நிலையில், வெற்றிமாறன் தயாரிக்கும் படத்தில் நடிக்கிறார் ஆண்ட்ரியா.
Samayam Tamil andrea


வடசென்னை, அசுரன் என அடுத்தடுத்து மிகப் பெரிய ஹிட் கொடுத்துள்ள வெற்றிமாறன், அடுத்ததாக சூரி மற்றும் சூர்யா ஆகியோரை வைத்து தனித்தனியே இரண்டு படங்களை இயக்கவிருக்கிறார். அதற்கிடையில், தனது உதவி இயக்குநருக்காக ஒரு படத்தை தயாரிக்கிறார். இது பெண்களை முன்னிலைப்படுத்தும் ஒரு கதையாம். இந்த கதைக்காகத்தான் ஆண்ட்ரியாவை அணுகியுள்ளனர். அவரும் ஓகே சொல்லிவிட்டாராம். இவருடன் லவ்லின் சந்திரசேகரும் நடிக்கிறார்.

நடிகை விஜி சந்திரசேகரின் மகள் லவ்லின். ஏற்கனவே லட்சுமி ராமகிருஷ்ணனின் ஹவுஸ் ஓனர் படத்தில் அறிமுகமாகியிருந்தார். இந்நிலையில் இப்படி ஒரு ஸ்ட்ராங்கான ஸ்கிரிப்டில் நடிக்கவிருக்கிறார். இந்த படத்தில் நடிக்கும் மற்ற கதாபாத்திரங்கள் குறித்தும், டெக்னீசியன்கள் குறித்தும் விரைவில் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்