ஆப்நகரம்

அஜீத்துடன் மூன்றாவது முறையாக இணையும் அனிருத்!

அஜீத் நடிக்கவிருக்கும் படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் மூன்றாவது முறையாக இசையமைக்கவுள்ளதாக தெரிகிறது.

TNN 22 Sep 2017, 7:00 pm
அஜீத் நடிக்கவிருக்கும் படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் மூன்றாவது முறையாக இசையமைக்கவுள்ளதாக தெரிகிறது.
Samayam Tamil anirudh looking for a hat trick with thala ajith
அஜீத்துடன் மூன்றாவது முறையாக இணையும் அனிருத்!


நடிகர் அஜீத் சொந்த வாழ்க்கையிலும் சரி, சினிமாவிலும் சரி அதிக நண்பர்களை வைத்துக் கொள்வதில்லை. அவருக்குபிடித்த சிலரை மட்டும் தன்னுடன் வைத்தக் கொள்கிறார் அஜீத். அப்படி பட்டவர்கள்தான் இயக்குனர் சிவாவும், இசையமைப்பாளரும் அனிருத்தும்.

சிவா இயக்கிய ‘வேதாளம்‘ படத்துக்கு இசையமைத்ததன் மூலம் அஜீத்தின் அன்புக்கு பாத்திரமானவராக விளங்குகிறார் அனிருத். அவர் இசையமைத்த ‘ஆலுமா டோலுமா’பாடல், இப்போதும் இளைஞர்கள் மற்றும் குழந்தைகளின் பேவரிட்டாக இருக்கிறது. இரண்டாவது முறையாக ‘விவேகம்‘ படத்திலும் இணைந்தவர்கள், தற்போது மூன்றாவது முறையாகவும் இணைய இருக்கின்றனர்.

அஜீத்தின் அடுத்த படத்தையும் சிவா தான் இயக்கவுள்ளார் என உறுதியாகத் தெரிகிறது. நடிகர் அஜீத் தற்போது அறுவை சிகிச்சை செய்து கொண்டு ஓய்வில் இருக்கிறார். இந்த ஓய்வு மூன்று மாதம் இருக்க வேண்டுமாம். அதற்குள் இயக்குனர் சிவாவிடம் கதையைத் தயார் செய்யச் சொல்லிவிட்டாராம் அஜீத். அந்தப் படத்துக்கும் அனிருத் தான் இசையமைப்பாளராம். அஜீத்துடன் அனிருத் இணையும் மூன்றாவது படமாம் இது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்