ஆப்நகரம்

விஷாலின் முன்னாள் காதலி இவரை தான் திருமணம் செய்யப் போகிறாரா?

விஷாலின் முன்னாள் காதலியான அனிஷா தொழில் அதிபர் ஒருவரை திருமணம் செய்து கொள்ளப் போவதாக கூறப்படுகிறது.

Samayam Tamil 18 Dec 2020, 8:33 am
விஷாலுக்கும், தெலுங்கு படங்களில் நடித்து வரும் அனிஷா அல்லா ரெட்டிக்கும் இடையே காதல் ஏற்பட்டது. அந்த காதலுக்கு இரு வீட்டாரும் பச்சைக் கொடி காட்டவே கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஹைதராபாத்தில் பிரமாண்டமாக நிச்சயதார்த்தம் நடந்தது.
Samayam Tamil anisha


அதில் இரு வீட்டாரும், நெருங்கிய நண்பர்கள் சிலர் மட்டுமே கலந்து கொண்டார்கள். ஆகஸ்ட் மாதம் திருமணம் என்று முடிவு செய்யப்பட்டது. அதன் பிறகு அக்டோபர் மாதம் திருமணம் நடக்கும் என்று கூறப்பட்டது. நடிகர் சங்க கட்டிடத்தில் தான் திருமணம் செய்து கொள்வேன் என்று விஷால் கூறியதால் திருமணம் தள்ளிப் போவதாக அவரின் தந்தை ஜி.கே. ரெட்டி தெரிவித்தார்.

இந்நிலையில் தான் விஷாலுடன் இருக்கும் அனைத்து புகைப்படங்களையும் இன்ஸ்டாகிராமில் இருந்து நீக்கினார் அனிஷா. இதையடுத்து விஷாலும், அனிஷாவும் பிரிந்துவிட்டதாக பேச்சு கிளம்பியது. திருமணம் நிற்கவில்லை என்று விஷாலின் தந்தை தெரிவித்தார். ஆனால் பிரேக்கப் குறித்து அனிஷாவும், விஷாலும் எதுவும் தெரிவிக்கவில்லை. இருவருமே அமைதியாக இருந்துவிட்டார்கள். தான் அனிஷாவுடன் இல்லை என்று விஷால் பின்னர் பேட்டி ஒன்றில் தெரிவித்தார்.

இதையடுத்து அனிஷாவுக்கு அவர் வீட்டில் மாப்பிள்ளை தேடி வந்தார்கள். இந்நிலையில் தொழில் அதிபர் ஒருவரை அனிஷாவுக்கு பார்த்து வைத்துள்ளதாகவும், விரைவில் திருமணம் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன.

அனிஷாவை பிரிந்த பிறகு விஷால் கெரியரில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார். அவர் சக்ரா படத்தில் நடித்துள்ளார். ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் தன் நண்பன் ஆர்யாவுடன் சேர்ந்து எனிமி படத்தில் நடித்து வருகிறார். எனிமி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது.

ரஜினி, கமல் மட்டும் தானா, நாங்களும் வருவோம்ல: தேர்தல் களத்தில் குதிக்கும் விஷால்?

மேலும் துப்பறிவாளன் 2 படத்தின் மீதமுள்ள காட்சிகளை இயக்கி நடிக்கவிருக்கிறார் விஷால். இதற்கிடையே 2021ம் ஆண்டு நடக்கவிருக்கும் தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிட விஷால் ஆர்வமாக இருக்கிறாராம். இது தொடர்பாக அவர் விஷால் மக்கள் நல இயக்கத்தினரை அழைத்து ஆலோசனை நடத்தியிருக்கிறாராம்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்