ஆப்நகரம்

குழந்தை பிறந்து ஒரு மாசம் தான்: மீண்டும் கர்ப்பமாகத் துடிக்கும் விக்ரம் பட நடிகை

தான் கர்ப்பமாக இருந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டு வயிறு பெரிதாக இருந்ததை மிஸ் பண்ணுவதாகவும், மீண்டும் பிள்ளை பெற்றுக் கொள்ள தயார் என்றும் தெரிவித்துள்ளார் நடிகை அனிதா ஹசநந்தனி.

Samayam Tamil 11 Mar 2021, 1:28 pm

ஹைலைட்ஸ்:

  • இரண்டாவது குழந்தைக்கு தயாரான அனிதா
  • கடந்த மாதம் ஆண் குழந்தையை பெற்றெடுத்த அனிதா
  • மகனுக்கு ஆரவ் ரெட்டி என பெயர் வைத்த அனிதா
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil anita
ஐஸ்வர்யா ராயின் தால் படம் மூலம் நடிகையானவர் அனிதா ஹசநந்தனி. மனோஜ், குணால் நடித்த வருஷமெல்லாம் வசந்தம் படம் மூம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். பின்னர் விக்ரமுடன் சேர்ந்து சாமுராய் படத்தில் நடித்தார். சுக்ரன், நாயகன், மகாராஜா ஆகிய படங்களில் நடித்துள்ளார். தமிழ் தவிர்த்து தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மொழி படங்களிலும் நடித்துள்ளார் அனிதா.
அவர் தற்போது இந்தி தொலைக்காட்சி சீரியல்களில் தான் கவனம் செலுத்திக் கொண்டிருக்கிறார். ரோஹித் ஷெட்டி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட அனிதா கடந்த மாதம் 9ம் தேதி ஆண் குழந்தையை பெற்றெடுத்தார்.

அந்த குழந்தைக்கு ஆரவ் ரெட்டி என்று பெயர் வைத்துள்ளனர். அவர் கர்ப்பமாக இருந்தபோது கணவருடன் சேர்ந்து போட்டோஷூட்டில் கலந்து கொண்டார். அந்த புகைப்படங்களை கணவனும், மனைவியும் சமூக வலைதளங்களில் வெளியிட்டனர்.
View this post on Instagram A post shared by Anita H Reddy (@anitahassanandani)
இந்நிலையில் தான் கர்ப்பமாக இருந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டிருக்கும் அனிதா, வயிறு பெரிதாக இருந்ததை மிஸ் பண்ணுவதாகவும், இரண்டாவது குழந்தைக்கு தயார் என்றும் தெரிவித்துள்ளார். இது குறித்து தெரிய வந்தால் ரோஹித் கடுப்பாகி தன்னை இன்ஸ்டாகிராமில் பின்தொடர்வதை நிறுத்தினாலும் நிறுத்திவிடுவார் என்று அனிதா தன்னைத் தானே கலாய்த்துக் கொண்டிருக்கிறார்.

அந்த போஸ்ட்டை பார்த்த ரசிகர்களோ, அவசரம் வேண்டாம். குறைந்தது ஓராண்டாவது இடைவெளி வேண்டும். உடம்பை பார்த்துக் கொள்ளுங்கள் என்று அறிவுரை வழங்கியுள்ளனர்.

ஆரவ் பிறந்து ஒரு மாதமானதை கொண்டாட குழந்தையின் வீடியோவை இன்ஸ்டாகிராமில் போஸ்ட் செய்தார் அனிதா. ஆரவ் பெயரில் இன்ஸ்டாகிராமில் கணக்கு துவங்கியிருக்கும் அனிதா அதில் அந்த வீடியோவை வெளியிட்டு நான் பிறந்து ஒரு மாதமாகிவிட்டது என்று குறிப்பிட்டிருந்தார்.
View this post on Instagram A post shared by Aaravv Reddy (@aaravvreddy)
குழந்தை பிறந்ததில் இருந்தே அதன் புகைப்படங்கள், வீடியோக்களை அவ்வப்போது இன்ஸ்டாகிராமில் போஸ்ட் செய்து வருகிறார். அதை பார்த்துவிட்டு பலரும் லைக் செய்வதுடன் ஆரவை வாழ்த்தவும் செய்கிறார்கள்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்