ஆப்நகரம்

என்னது, கணவரை விவாகரத்து செய்கிறாரா அனிதா சம்பத்?: உண்மை இதோ

கணவர் பிரபாகரனை விவாகரத்து செய்கிறார் அனிதா சம்பத் என்று தகவல் வெளியானது. இந்நிலையில் அது குறித்து அனிதா விளக்கம் அளித்துள்ளார்.

Samayam Tamil 13 Jul 2021, 9:35 am
விவாகரத்து பேச்சு குறித்து விளக்கம் அளித்து அதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் பிக் பாஸ் நிகழ்ச்சி புகழ் அனிதா சம்பத்.
Samayam Tamil anitha sampath is very much in love with hubby
என்னது, கணவரை விவாகரத்து செய்கிறாரா அனிதா சம்பத்?: உண்மை இதோ


அனிதா சம்பத்

செய்தி வாசிப்பாளராக தன் கெரியரை துவங்கியவர் அனிதா சம்பத். சேலையில் அவர் குடும்பத்து குத்துவிளக்கு மாதிரி இருப்பதாக ரசிகர்கள் கூறினார்கள். அவருக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இந்நிலையில் தான் அவர் விஜய்யின் சர்கார் படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானார். ரஜினியின் தர்பார், காப்பான் ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். கணவர் பிரபாகரன் மீது உயிரையே வைத்திருக்கும் அனிதா பற்றி ஒரு தகவல் வெளியானது.

விவாகரத்து

பிக் பாஸ் 4 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனிதா சம்பத் தன் கணவர் பிராபகரன் பற்றி பெருமையாக பேசினார். எந்த இடத்திலும் அவர் கணவரை விட்டுக் கொடுக்காமல் இருந்தது பலரையும் கவர்ந்தது. இந்நிலையில் அனிதா சம்பத் தன் கணவரை விவாகரத்து செய்கிறார் என்று ஃபேஸ்புக்கில் ஒரு செய்தி வெளியானது. அதை பார்த்தவர்கள் அனிதாவுமா இப்படி என்று பேசத் துவங்கினார்கள்.

விளக்கம்

தன்னை பற்றிய செய்தியை பார்த்த அனிதா சம்பத் கடுப்பாகி விளக்கம் அளித்திருக்கிறார். கண்டன்ட் இல்லை என்று இப்படி பண்றாங்க என்று கமெண்ட் போட்டுள்ளார். இதன் மூலம் தான் விவாகரத்து செய்யவில்லை என்பதை தெளிவுபடுத்திவிட்டார். அனிதாவின் கமெண்ட்டை பார்த்தவர்கள், சாரி ஒரு நிமிஷம் உங்களை தவறாக நினைத்துவிட்டோம் என்றார்கள்.

டிடி, ரம்யா

சின்னத்திரை நிகழ்ச்சி தொகுப்பாளினிகளான டிடி என்கிற திவ்யதர்ஷினி, ரம்யா வரிசையில் அனிதா சம்பத்தும் தன் கணவரை விவாகரத்து செய்கிறார் என்று பேச்சப்பட்ட நிலையில் அவர் விளக்கம் அளித்து அந்த பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார். அனிதா சம்பத் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கிறார். தன்னை பற்றி யாராவது மோசமாக பேசினாலோ, வதந்தி பரப்பினாலோ திட்டாமல் நக்கலாக பதில் அளிப்பதில் வல்லவர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்