ஆப்நகரம்

அனிதா சம்பத்தின் தந்தை மாரடைப்பால் மரணம்

அனிதா சம்பத்தின் தந்தை மாரடைப்பால் மரணம் அடைந்தார்.

Samayam Tamil 29 Dec 2020, 11:50 am
பிரபல செய்தி வாசிப்பாளரும், நடிகையுமான அனிதா சம்பத் பிக் பாஸ் 4 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கடந்த வாரம் தான் வெளியேற்றப்பட்டார். இந்நிலையில் அவரின் எழுத்தாளர் தந்தையான சமபந்த் மாரடைப்பால் மரணம் அடைந்தார்.
Samayam Tamil anitha sampath


சம்பத் இறந்த செய்தி அறிந்த பிக் பாஸ் பார்வையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த நேரத்தில் அனிதா மட்டும் பிக் பாஸ் வீட்டில் இருந்திருந்தால் தந்தையின் முகத்தை கடைசியாக ஒரு முறை பார்க்க முடியாமல் போய்விட்டதே என்று காலத்திற்கும் வருத்தப்பட்டிருப்பார்.

கடவுளாக பார்த்து தான் அனிதாவை கடந்த வாரம் வெளியேற்ற வைத்திருக்கிறார். இது என்ன ஒரே மாரடைப்பால் மரண செய்தியாக இருக்கிறது என்று பிக் பாஸ் பார்வையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அதற்குள் போயிட்டீங்களேணா: மாஸ்டர் பட நடிகரின் மரணத்தால் லோகேஷ் கண்ணீர்

மாநகரம், கைதி, பிகில், மாஸ்டர் உள்ளிட்ட படங்களில் நடித்த அருண் அலெக்சாண்டர் நேற்று உடற்பயிற்சி செய்தபோது மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார். அதற்குள் போய்விடுவீர்கள் என்று நினைக்கவே இல்லை அண்ணா என்று லோகேஷ் கனகராஜ் ட்வீட் செய்திருந்தார்.

இந்நிலையில் சம்பத் மாரடைப்பால் மரணம் என்று தகவல் வெளியாகி பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்