ஆப்நகரம்

பிக்பாஸ் வீட்டில் பலூடன் நுழைந்தது அஞ்சலியா?

பிக்பாஸ் வீட்டில் பலூடன் நநுழைந்தது நடிகை அஞ்சலி என்ற தகவல் வெளியாகியுள்ளது.

TOI Contributor 25 Sep 2017, 5:51 pm
பிக்பாஸ் வீட்டில் பலூடன் நநுழைந்தது நடிகை அஞ்சலி என்ற தகவல் வெளியாகியுள்ளது.
Samayam Tamil anjali in tamil bigg boss house
பிக்பாஸ் வீட்டில் பலூடன் நுழைந்தது அஞ்சலியா?


பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவடைய இன்னும் 6 நாட்களே உள்ளன. வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று இறுதிப்போட்டி நடைபெறவுள்ளது. நடிகர் கமல், அடுத்தமுறை உங்களை இந்த மேடையில்தான் சந்திக்கப் போகிறேன் என்று போட்டியாளர்களிடம் கூறினார். மேலும் அந்த வெற்றி விழாவிற்கு நான்கு பேர் மட்டுமே இருக்க முடியும் என்றார்.

இந்நிலையில் போட்டியாளர்கள் கணேஷ், சுஜா ஆகிய இருவரில் யாரை காப்பாற்றுவது என்ற குழப்பத்தில் இருந்த சிநேகன், கணேஷூக்கு மதிப்பெண்களைக் கொடுத்தார்.அதனால் நேற்று சுஜா எலிமினேட் செய்யப்பட்டார். தற்போது 5 பேர் மட்டுமே மீதம் உள்ளனர்.

நேற்றைய நிகழ்ச்சியின் முடிவில் நடிகை ஒருவர் பலூனுடன் பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைகிறார். பலூனில் ‘’பலூன்’’ என்ற எழுத்து உள்ளது. பலூன் படத்தில் ஜெய், அஞ்சலி, ஜனனி ஆகியோர் நடித்துள்ளனர். நேற்று பிக்பாஸ் வீட்டிற்குள் வந்தது நடிகை அஞ்சலியாகத்தான் இருக்க வேண்டும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

Anjali in Tamil bigg boss house?

அடுத்த செய்தி

டிரெண்டிங்