ஆப்நகரம்

'கடவுள் இருக்கான் குமாரு' ரிலீசில் மீண்டும் மாற்றம்

இயக்குனர் எம்.ராஜேஷ் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள 'கடவுள் இருக்கான் குமாரு' படத்தின் மீதான இடைக்காலத் தடை நீங்கினாலும், படத்தின் வெளியீடு மீண்டும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

TNN 15 Nov 2016, 6:33 pm
சென்னை: இயக்குனர் எம்.ராஜேஷ் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள 'கடவுள் இருக்கான் குமாரு' படத்தின் மீதான இடைக்காலத் தடை நீங்கினாலும், படத்தின் வெளியீடு மீண்டும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil another change in gv prakashs kadavul irukaan kumaru release date
'கடவுள் இருக்கான் குமாரு' ரிலீசில் மீண்டும் மாற்றம்


அம்மா கிரியேஷன்ஸ் சார்பில் டி சிவா தயாரிப்பில், ஜிவி பிரகாஷ், நிக்கி கல்ராணி நடித்துள்ள இப்படம் கடந்த நவ.10ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், நாடு முழுவதும் ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுக்கள் செல்லாது என்ற அறிவிப்பு வெளியானதன் விளைவாக இப்படத்தின் வசூலை கருத்தில் கொண்டு படத்தின் வெளியீட்டை நவ.17 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

தற்போது, ரூபாய் நோட்டு விவகாரம் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியிருப்பதால் மீண்டும் படத்தின் வெளியீட்டை நவ.18ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளனர். இனி எவ்வித மாற்றமும் இல்லாமல் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள தேதியில் 'கடவுள் இருக்கன் குமாரு' படம் வெளியாகும் என படத்தின் தயாரிப்பாளர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்