ஆப்நகரம்

ராகுல் பிரீத்தி சிங்கை ஓரங்கட்டிய அனு இம்மானுவல்

மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடிக்கும் புதிய படம் துப்பறிவாளன். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக ராகுல் பிரீத்தி சிங் நடிக்கயிருந்தது.

TNN 14 Oct 2016, 4:34 pm
மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடிக்கும் புதிய படம் துப்பறிவாளன். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக ராகுல் பிரீத்தி சிங் நடிக்கயிருந்தது. இந்நிலையில், இப்படத்திற்காக தேதி கொடுக்காததால், இயக்குனருக்கும் இவருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது என்கிறது தகவல்.
Samayam Tamil anu emmanuel in rakul preet singh out
ராகுல் பிரீத்தி சிங்கை ஓரங்கட்டிய அனு இம்மானுவல்


இதனால், இவருக்குப் பதிலாக ஆக்ஷன் ஹீரோ பிஜூ படத்தில் நிவின் பாலிக்கு ஜோடியாக நடித்த அனு இம்மானுவல் துப்பறிவாளன் படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடிக்கயிருக்கிறார். மேலும், இப்படத்தில் வினய், பிரசன்னா, அக்ஷரா ஹாசன், கே.பாக்யராஜ் ஆகியோர் பலர் நடிக்கின்றனர். அரோல் கொரெல்லி இசையமைக்கும் இப்படத்தை விஷால் தயாரிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தைத் தொடர்ந்து விஷால் லிங்குசாமி இயக்கத்தில் சண்டைக்கோழி படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிப்பார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தீபாவளிக்கு வரயிருந்த தன்னுடைய கத்திச்சண்டை படத்தை விஷால் அடுத்த மாதத்திற்கு தள்ளிப்போட்டுள்ளாராம். ஏனென்றால், தீபாவளிக்கு அதிக பட்ஜெட்டில் உருவாகி வரும் கார்த்தியின் காஷ்மோரா படம் தீபாவளிக்கு வரவேண்டும் என்பதற்காகத்தான் என்கிறது தகவல்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்