ஆப்நகரம்

அல்லு அர்ஜுனுக்கு ஜோடியான அனு இம்மானுவேல்!

தெலுங்கு படம் ஒன்றில் அல்லு அர்ஜுன் ஜோடியாக நடிகை அனு இம்மானுவேல் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

TNN 18 Jul 2017, 3:31 pm
தெலுங்கு படம் ஒன்றில் அல்லு அர்ஜுன் ஜோடியாக நடிகை அனு இம்மானுவேல் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
Samayam Tamil anu emmanuel will be join with allu arjun
அல்லு அர்ஜுனுக்கு ஜோடியான அனு இம்மானுவேல்!


நடிகை அனு இம்மானுவேல் அமெரிக்காவில் பிறந்து வளர்ந்தனர். தற்போது இவர் மலையாளம் மற்றும் தெலுங்குப் படங்களில் நடித்து வருகிறார். ‘ஸ்வப்ன சஞ்சாரி’ மலையாளப் படத்தில், ஜெயராம் - சம்வ்ருதா சுனில் மகளாக, குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் இவர். பின்னர், ‘ஆக்ஷன் ஹீரோ பிஜு’ படத்தில், நிவின் பாலிக்கு ஜோடியாக அறிமுகமானார்.

தெலுங்குப் படங்களிலும் நடித்துவரும் அனு இம்மானுவேல், விஷால் ஜோடியாக ‘துப்பறிவாளன்’ படத்தில் நடித்து வருகிறார். மிஷ்கின் இயக்கிவரும் இந்தப் படத்தில், பிரசன்னா மற்றும் ஆன்ட்ரியா நடிக்கின்றனர். தற்போது, அல்லு அர்ஜுன் ஜோடியாக ஒரு தெலுங்குப் படத்தில் அனு இம்மானுவேல் ஒப்பந்தமாகியுள்ளார். ‘நா பேரு சூர்யா’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தை, வக்கந்தம் வம்சி இயக்குகிறார். படத்திற்கு விஷால் - சேகர் இசையமைக்கிறார். இந்தப் படத்தில், நடிகர் சரத்குமார் முக்கியமான கேரக்டரில் நடிக்கிறார் .

அடுத்த செய்தி

டிரெண்டிங்