ஆப்நகரம்

எங்களுக்குள் எந்த மோதலும் இல்லை: நடிகை அனுபமா பரமேஸ்வரன்!

பிரகாஷ்ராஜ் எனக்கு தந்தை போன்றவர், படப்பிடிப்பில் அவருக்கும் எனக்கும் எந்த மோதலும் இல்லை என்று நடிகை அனுபமா பரமேஸ்வரன் கூறியுள்ளார்.

Samayam Tamil 9 Jul 2018, 4:56 pm
பிரகாஷ்ராஜ் எனக்கு தந்தை போன்றவர், படப்பிடிப்பில் அவருக்கும் எனக்கும் எந்த மோதலும் இல்லை என்று நடிகை அனுபமா பரமேஸ்வரன் கூறியுள்ளார்.
Samayam Tamil Prakash Raj Anupama
எங்களுக்குள் எந்த மோதலும் இல்லை: நடிகை அனுபமா பரமேஸ்வரன்!


நடிகை அனுபமா பரமேஸ்வரன் தற்போது ‘ஹலோ குரு பிரேம கோஸம்’ என்ற தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் ஹீரோவாக ராம் நடிக்க, அனுபமாவுக்குஅப்பாவாகநடிகர் பிரகாஷ்ராஜ் நடிக்கிறார்.

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு படப்பிடிப்பின் போது நடிகை அனுபவமாவுக்கும், நடிகர் பிரகாஷ்ராஜுக்கும் கடும் மோதல் ஏற்பட்டதாகவும், அதைப் பார்த்த இயக்குனர் அவர்களை செட்டிலிருந்து போகச் சொன்னதாகவும் தகவல் வெளியானது.


ஆனால் இதற்கு மறுப்பு தெரிவிக்கும் விதமாக நடிகை அனுபமா, பிரகாஷ்ராஜூடன் தான் இணைந்து எடுத்துக்கொண்ட போட்டோவை டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். யாரோ திட்டமிட்டு இப்படியொரு வதந்தியை பரப்பி விட்டதாக கூறிய அனுபமா, பிரகாஷ்ராஜ் எனது தந்தை போன்றவர். அவருடன் நான் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக வெளியான செய்தியை அறிந்து நான் வருந்துகிறேன்’’ என்றும் கூறியுள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்