ஆப்நகரம்

அனுஷ்காவால் எகிறியது பாகுபலி பட்ஜெட்!

அனுஷ்காவால் எகிறியது பாகுபலி பட்ஜெட்!

TOI Contributor 31 Mar 2017, 11:48 am
உலகமே மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் படம் பாகுபலி. ஏப்ரல் மாதம் பாகுபலியின் இரண்டாம் பாகம் வெளியாக உள்ளது. மிகுந்த பொருட்செலவில் உருவாகியுள்ள பாகுபலி திரைப்படம் வெளியாவதற்கு முன்பே பல கோடி ரூபாய் வருமானம் ஈட்டியுள்ளது. இந்நிலையில் உலகம் முழுவதும் 1000 கோடி ரூபாய் வசூல் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அனுஷ்காவை வைத்து பாகுபலி முதல் பாகம் படமாக்கப்பட்ட போதே, அவருடைய இரண்டாம் பாகத்தின் சில காட்சிகளையும் இயக்குநர் எஸ்எஸ் ராஜமௌலி படமாக்கியிருந்தார். ஆனால் இரண்டாம் பாகம் எடுத்து முடிக்கப்பட்ட போது, ஏற்கனவே எடுக்கப்பட்ட அனுஷ்காவின் காட்சிகளுக்கும், இதற்கும் பெரிய வித்தியாசம் இருந்துள்ளது.
Samayam Tamil anushka brings big loss to baahubali
அனுஷ்காவால் எகிறியது பாகுபலி பட்ஜெட்!


இதனால் முதல் பாகத்தின் போது அனுஷ்காவை வைத்து எடுத்த காட்சிகள் அனைத்தையும் ராஜமௌலி மீண்டும் படமாக்கியுள்ளார். இதனால் படத்தின் பட்ஜெட் எதிர்பார்த்ததைவிட அதிகமாகியுள்ளதாக கூறப்படுகிறது. நடிகர் நடிகைகளை வைத்து படப்பிடிப்பு, அதன்பின்னர் கிராபிக்ஸ் வேலை என்று 20 கோடி ரூபாய் அளவிற்கு பட்ஜெட் அதிகமாகியுள்ளது. ஆனால் படத்தின் வரவேற்புக்கு மத்தியில் இதெல்லாம் எதுவும் இல்லை என்று படக்குழுவினர் கூறுகின்றனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்