ஆப்நகரம்

தன் ஜாதக தோஷத்தைப் போக்க கோயில் கோயிலாக சுற்றி வரும் நடிகை அனுஷ்கா!

நடிகை அனுஷ்கா, தன் ஜாதகத்தில் இருக்கும் தோஷத்தைப் போக்க தற்போது பல்வேறு கோயில்களுக்கு சென்று வழிபட்டு வருகிறார்.

Samayam Tamil 19 May 2018, 12:33 pm
நடிகை அனுஷ்கா, தன் ஜாதகத்தில் இருக்கும் தோஷத்தைப் போக்க தற்போது பல்வேறு கோயில்களுக்கு சென்று வழிபட்டு வருகிறார்.
Samayam Tamil anushka


சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்து வருபவர் நடிகை அனுஷ்கா. அவர் எப்போதும் ரசிகர்கள் முன் புன்னகையுடன் தான் தோன்றுவார். தற்போது நடிகை அனுஷ்கா, கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் படங்களை மட்டும் தேர்நதெடுத்து நடித்து வருகிறார். அதோடு அவர் நடித்த ‘பாகுபலி’ படம் அவரின் திரைப்பயணத்திற்கு ஒரு முக்கிய படம் என்றே கூறலாம். இந்த நேரத்தில் அனுஷ்காவின் திருமணம் குறித்து நிறைய தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன.

தற்போது அனுஷ்கா ஜாதகத்தில் ஏதோ தோஷம் உள்ளதாம், அதனால் தான் திருமணம் தடைப்பட்டு வருகிறதாம். இதனால் நடிகை அனுஷ்கா தற்போது கோயில் கோயிலாக சென்று சாமி தரிசனம் செய்து தனது ஜாதக தோஷத்தை போக்கி வருவதாக கூறப்படுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்