ஆப்நகரம்

‘நாச்சியார்’ பட வாய்ப்பை இழந்த அனுஷ்கா!

‘நாச்சியார்’ பட தெலுங்கு ரீமேக்கில் நடிக்கும் வாய்ப்பை நடிகை அனுஷ்கா இழந்துள்ளார்.

Samayam Tamil 10 Mar 2018, 4:12 pm
‘நாச்சியார்’ பட தெலுங்கு ரீமேக்கில் நடிக்கும் வாய்ப்பை நடிகை அனுஷ்கா இழந்துள்ளார்.
Samayam Tamil anushka missed the movie naachiyaar telugu remake
‘நாச்சியார்’ பட வாய்ப்பை இழந்த அனுஷ்கா!


நடிகை அனுஷ்கா, ‘பாகுபலி’ படத்துக்குப் பின் அதிக படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டார். நல்ல தரமான படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். மேலும் அவர் உடல் எடையை கூடியிருந்தது. அதை குறைக்கும் முயற்சியில் புதிய படங்களில் ஒப்புக் கொள்ளாமல் இருந்தார். மேலும் அவருக்கு விரைவில் திருமணம் நடைபெறவுள்ளதால் பல வாய்ப்புகளை மறுத்து வருகிறார் என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில் இயக்குனர் பாலா இயக்கத்தில் ஜோதிகா நடிப்பில் தமிழில் வெளியான படம் ‘நாச்சியார்’.தற்போது இந்தப் படத்தை தெலுங்கில் ரீமேக் செய்யவுள்ளனர். அதற்காக ஜோதிகா கேரக்டரில் நடிக்க நடிகை அனுஷ்காவை அணுகியுள்ளனர். ஆனால் அவர் அதில் நடிக்க மறுத்துவிட்டார். காரணம் ஒரு புதிய தெலுங்கு படத்திற்காக தொடர்ந்து 6 மாதம் கால்ஷீட் கொடுத்துள்ளதால் இந்த படத்தில் நடிக்க முடியாது என்று கூறிவிட்டாராம்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்