ஆப்நகரம்

நந்தீஸ்வரர் சாமி கோவிலுக்கு படகில் சென்ற அனுஷ்கா: வைரல் வீடியோ

அனுஷ்கா படகில் கோவிலுக்கு சென்றபோது எடுக்கப்பட்ட வீடியோ வெளியாகி வைரலாகியுள்ளது.

Samayam Tamil 10 Dec 2020, 1:36 pm
ஆந்திர மாநிலம் போலவரத்தில் இருக்கும் மகா நந்தீஸ்வரர் சாமி கோவிலுக்கு சென்றுள்ளார் அனுஷ்கா. தோழிகள் இருவருடன் அனுஷ்கா படகில் அந்த கோவிலுக்கு சென்றபோது எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. அந்த வீடியோவை அனுஷ்காவின் ரசிகர்கள் ஷேர் செய்து கொண்டிருக்கிறார்கள்.
Samayam Tamil anushka


மஞ்சள் நிற சுடிதார் அணிந்து கைக்குட்டையை வைத்து முகத்தை மறைத்தபடி படகில் அமர்ந்திருக்கிறார் அனுஷ்கா. அவருடன் இருக்கும் இரண்டு பெண்களில் ஒருவர் ஆடை வடிமைப்பாளர் பிரசாந்தி. பாகுபலி படத்தின் ஆடை வடிவமைப்பாளரான பிரசாந்தி, அனுஷ்காவின் நெருங்கிய தோழி ஆவார்.
அனுஷ்காவுக்கு திருமணம் செய்து வைக்க அவரின் பெற்றோர் மாப்பிள்ளை தேடி வருகிறார்கள். திருமணம் தொடர்பாக அனுஷ்கா தன் பெற்றோருடன் பல கோவில்களுக்கு சென்றார். இந்நிலையில் தோழிகளுடன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளார்.

கெரியரை பொறுத்த வரை ஹேமந்த் மதுர்கர் இயக்கத்தில் அனுஷ்கா, மாதவன் உள்ளிட்டோர் நடித்த சைலன்ஸ் படம் ஓடிடியில் வெளியானது. ரெண்டு படத்தை அடுத்து 14 ஆண்டுகள் கழித்து அனுஷ்காவும், மாதவனும் சேர்ந்து நடித்தார்கள். சைலன்ஸ் படத்தில் அனுஷ்காவின் நடிப்பு அனைவருக்கும் பிடித்தபோதிலும் கதை வலுவில்லை, அதை சொன்ன விதம் சரியில்லை என்று விமர்சனம் எழுந்தது.

சைலன்ஸ் படத்தை அடுத்து அனுஷ்கா புதுப்படங்கள் எதையும் ஒப்புக் கொள்ளவில்லை என்று கூறப்பட்டது. இந்நிலையில் அவர் இரண்டு படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறாராம். அது குறித்த அறிவிப்பு அடுத்த மாதம் வெளியாகுமாம்.

அனுஷ்கா நடித்த பாகமதி படம் இந்தியில் துர்காமதி என்கிற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. அந்த படத்தில் அனுஷ்கா கதாபாத்திரத்தில் புமி பெட்நேகர் நடித்தார். பாகமதி படத்தை இயக்கிய ஜி. அசோக் தான் துர்காமதி படத்தையும் இயக்கினார்.

லாக்டவுன் நேரத்தில் அனுஷ்கா ட்விட்டரில் கணக்கு துவங்கினார். சைலன்ஸ் ரிலீஸையொட்டி அவர் ட்விட்டருக்கு வந்தார். ரசிகர்கள் அவரை மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.

கள்ளக்காதலுக்காக கணவரை கொன்று வில்லியாகப் போகிறாரா சிம்ரன்?

அடுத்த செய்தி

டிரெண்டிங்