ஆப்நகரம்

'குயீன்' ரீமேக் வாய்ப்பை மறுத்த அனுஷ்கா!

பிரபல பாலிவுட் திரைப்படமான 'குயீன்' ரீமேக்கில் நடிக்கும் வாய்ப்பை 'பாகுபலி' நாயகி அனுஷ்கா ஷெட்டி மறுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

TNN 12 Jun 2017, 4:53 pm
சென்னை: பிரபல பாலிவுட் திரைப்படமான 'குயீன்' ரீமேக்கில் நடிக்கும் வாய்ப்பை 'பாகுபலி' நாயகி அனுஷ்கா ஷெட்டி மறுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
Samayam Tamil anushka shetty turns down queen remake
'குயீன்' ரீமேக் வாய்ப்பை மறுத்த அனுஷ்கா!


பாலிவுட்டில் இயக்குனர் விகாஸ் பால் இயக்கத்தில் கங்கனா ரனாவத் நடிப்பில் வெளியான 'குயீன்' திரைப்படம் மெகாஹிட்டானது. இதைத் தொடர்ந்து இப்படத்தை தமிழ் மற்றும் தெலுங்கில் ரீமேக் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்நிலையில், இப்படத்தின் நாயகியாக தமன்னா ஒப்பந்தம் செய்யப்பட்ட நிலையில், பல்வேறு காரணங்களால் அவர் இப்படத்தில் இருந்து விலகியதாக கூறப்படுகிறது.

பிரபல நடிகை ரேவதி இயக்கத்தில் நடிகை சுஹாசினி வசனம் எழுதி வரும் 'குயீன்' ரீமேக்கில் நடிக்க 'பாகுபலி' நாயகி அனுஷ்காவை அனுகியதாகவும், கங்கனா ரனாவத்தின் நடிப்புடன் தனது நடிப்பு ஒப்பிடப்பட வாய்ப்புள்ளதாக கூறி, அவர் நடிக்க மறுத்துவிட்டதாகவும் படக்குழுவுக்கு நெருங்கிய வட்டாரம் தகவல் தெரிவிக்கின்றன.

தற்போது 'குயீன்' தமிழ் ரீமேக்கில் தமன்னாவுக்கு பதிலாக காஜல் அகர்வால் நடிக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. 'விவேகம்', 'விஜய் 61' ஆகிய திரைப்படங்களில் பிசியாக நடித்து வரும் காஜல் அகர்வால் 'குயீன்' தமிழ் ரீமேக்கிற்கு சம்மதம் கூறியதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எனினும், இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.

Anushka Shetty, the ‘go-to girl’ for female-centric films, was approached for the Telugu-Tamil remake. But the actress turned down the offer saying that people might compare her performance with that of Kangana’s.

அடுத்த செய்தி

டிரெண்டிங்