ஆப்நகரம்

பிரபாஸின் 20வது படத்தில் இணையும் அனுஷ்கா!

நடிகர் பிரபாஸ் நடிக்கவுள்ள தனது 20வது படத்தில் நடிகை அனுஷ்காவும் இணையவுள்ளார்.

Samayam Tamil 18 Dec 2018, 6:18 pm
நடிகை அனுஷ்காவுக்கு தமிழ் சினிமாவில் எப்போதும் அதிக முக்கியத்துவம் உண்டு. அதேபோல் தெலுங்கு சினிமாவிலும் முன்னணியில் இருக்கிறார். இருமொழிகளிலும், இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.
Samayam Tamil PRABHAS anushhka


அனுஷ்கா, சோலோவாக நடித்த ‘அருந்ததி’, ‘பாகமதி’ ஆகிய படங்களுக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது. நல்ல கதைகளை தேடி வந்த அவருக்கு ‘பாகுபலி’ திருப்பு முனையாக அமைந்தது.

தற்போது அவருக்கு உடல் எடை கூடிவிட்டதால் பட வாய்ப்புகள் அதிகம் இல்லை. இந்நிலையில் பிரபாஸின் 20 வது படத்தில் ஒரு முக்கிய காட்சியில் யாரை நடிக்க வைக்கலாம் என ஆலோசனை நடந்தபோது அனுஷ்கா ஓகே என பேசி முடித்து விட்டார்களாம். ‘பாகுபலி’ படத்தின் ஜோடி சேர்ந்த இவர்கள் இருவரை பற்றியும் காதல் கிசுகிசுக்கள் அதிகம் வந்தது. ரசிகர்கள் திருமண வாழ்க்கையிலும் இவர்கள் இணைவார்கள் என எதிர்பார்த்து வருகிறார்கள்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்