ஆப்நகரம்

ரஜினியின் அடுத்தப் படத்தை இயக்குபவர் இவர்தானாம்!

ரஜினியின் அடுத்தப் படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கவுள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கிறது.

Samayam Tamil 30 Jun 2018, 1:23 pm
ரஜினியின் அடுத்தப் படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கவுள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கிறது.
Samayam Tamil rajini murugadoss


சமீபத்தில் ரஜினி நடிப்பில் வெளியான படம் ‘காலா’. இந்தப் படத்தை அடுத்து தற்போது நடிகர் ரஜினி இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்திற்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது டார்ஜிலிங்கில் நடைபெற்று வருகிறது.

படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. படத்தில் ரஜினிக்கு வில்லனாக விஜய் சேதுபதியும், மகனாக பாபி சிம்ஹா மற்றும் சனந்த் ரெட்டி ஆகியோர் நடிக்கின்றனர். சனந்த் ரெட்டியின் ஜோடியாக நடிகை மேகா ஆகாஷ் நடிக்கிறார்.

இந்நிலையில் ரஜினியின் அடுத்தப் படத்தை ஏ.ஆர். முருகதாஸ் இயக்கப் போகிறார் என்ற செய்தி கோலிவுட் வட்டாரங்களில் தகவல் வெளியாகியுள்ளது. தற்போது ஏ.ஆர். முருகதாஸ், விஜய்யின் ‘சர்க்கார்’ படத்தை முடித்து விட்டு அடுத்ததாக ரஜினியுடன் இணையவுள்ளதாக கூறப்படுகிறது. இந்தப் படத்தை லைகா புரடெக்ஷன்ஸ் தயாரிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்