ஆப்நகரம்

ஏ ஆர் ரஹ்மானையே கலாய்க்கிறீங்களா? : ஆதரவா களமிறங்கிய இசை கலைஞர்கள்

இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் லண்டனில் நடத்திய இசை நிகழ்ச்சியின் போது கடுப்பில் ரசிகர்கள் வெளியேறியதாக கூறப்படும் சம்பவம் குறித்து சில இசைக்கலைஞர்கள் ரஹ்மானுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

TNN 15 Jul 2017, 3:58 pm
இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் லண்டனில் நடத்திய இசை நிகழ்ச்சியின் போது கடுப்பில் ரசிகர்கள் வெளியேறியதாக கூறப்படும் சம்பவம் குறித்து சில இசைக்கலைஞர்கள் ரஹ்மானுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
Samayam Tamil ar rahman concert controversy some musician supports to ar rahman
ஏ ஆர் ரஹ்மானையே கலாய்க்கிறீங்களா? : ஆதரவா களமிறங்கிய இசை கலைஞர்கள்


கடந்த வாரம் ஏ ஆர் ரகுமான் ‘நேற்று இன்று நாளை’ என்ற தலைப்பில் நடத்திய இசை நிகழ்ச்சியில் தமிழ் பாடல்கள் மட்டும் பாடப்பட்டதால், அதில் கலந்து கொண்ட வடமாநில இந்தி ரசிகர்கள் பாதி நிகழ்ச்சியிலேயே விரக்தியில் வெளியேறியதாக தகவல் வெளியானது.

ஆனால் இது உண்மை இல்லை. நிகழ்ச்சியில் இந்தி பாடல்களும் பாடப்பட்டது. அதோடு அப்படி ரசிகர்கள் யாரும் நடுவே வெளியேறவில்லை என தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் ஏ.ஆர்.ரகுமானுக்கு ஆதரவாக பாடகர்கள் மற்றும் பாடகிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

பாடகி ஷாஷா திரிபாதி கூறும்போது, அந்த நிகழ்ச்சி பெயரே ‘நேற்று இன்று நாளை’ என தமிழில் தான். அதனால் அங்கு தமிழில் தான் பாடுவார்கள் என்பது தெரியாதா? இசைக்கு மொழி பிரச்னை இல்லை. நான் சீன மொழி பாடலை கூட ரசிப்பேன் என்றார்.

பாடகர் ஸ்ரீனிவாஸ் கூறும்போது, “ஏ ஆர் ரகுமான் இசை நிகழ்ச்சிக்கு வந்துவிட்டு இந்தி பாடல் மட்டும் எதிர்பார்த்தால் எப்படி? அவர் மொழிகளின் எல்லையை கடந்தவர். எந்த மொழியாக இருந்தாலும் இசைக்கு மரியாதை அளிக்க வேண்டும்” என கூறியுள்ளார்.

இந்தி பாடகர் சோனு நிகாம் கூறும்போது, ‘எனக்கு தமிழ் மொழி தெரியாது. ஆனாலும் எஸ்.பி.பி தமிழில் பாடினால் ரசிப்பேன். அதே போலதான் யேசுதாஸும். ரகுமானை குற்றம் சொல்லாதீர்கள், ரசிகர்கள் அறியாமையால் பேசுகின்ரனர். என்றார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்