எந்த துறையாக இருந்தாலும், ஆளப்போறவன் தமிழன் தான் என்பதை ரசிகர்கள் உண்மையாக்க வேண்டும் என்று ஏஆர்.ரஹ்மான் கேட்டுக்கொண்டுள்ளார்.
அட்லி இயக்கத்தில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகி வரும் மெர்சல் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை கோலாகலமாக நடந்தது. இதில், பார்த்திபன், தனுஷ், காஜல் அகர்வால், சமந்தா, எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியின் போது இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி நடத்தினார். தன்னுடைய 25 ஆண்டுகளான சினிமா வாழ்க்கையில் இப்போதுள்ள ரசிகர்கள் புது தலைமுறையைச் சேர்ந்தவர்கள். அதனால், தனக்கு வயது குறைவு என்று கூறியுள்ளார்.
இதையடுத்து விஜய்யின் 25 வருட சினிமா வாழ்க்கையை பற்றி கூறுகையில், ஆளப்போறான் தமிழன் என்பதை தளபதி ரசிகர்கள் உண்மையாக்க வேண்டும் என்று கூறியுள்ளார். அது சினிமா துறையாக இருந்தாலும் சரி, வேறு எந்த துறையாக இருந்தாலும் சரி என்று கூறியுள்ளார். மேலும், பெண்களை அன்பாக பார்க்க வேண்டும், அவர்களை மதிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்