ஆப்நகரம்

'தக் ஃபேமிலி': அக்காவை விமர்சித்த தஸ்லிமாவுக்கு அப்பா ரஹ்மான் ஸ்டைலில் மகன் நெத்தியடி

அக்கா கதிஜாவுக்கு ஆதரவாக ஏ.ஆர். அமீன் வெளியிட்டுள்ள புகைப்படம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

Samayam Tamil 18 Feb 2020, 5:00 pm
இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மானின் மகள் கதிஜா கண்கள் மட்டும் தெரியும் வகையில் புர்கா அணிவதை பார்த்து தனக்கு மூச்சு முட்டுவதாக பிரபல எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின் ட்வீட் செய்தார். அதை பார்த்த கதிஜா, நான் விரும்பி புர்கா அணிகிறேன். எனக்கு எதுவும் மூச்சு முட்டவில்லையே. நாட்டில் எத்தனையோ விஷயம் நடக்கும்போது என் புர்கா தான் பெரிதாக தெரிகிறதா என்று கேள்வி எழுப்பினார்.
Samayam Tamil ar ameen


இந்நிலையில் ஏ.ஆர். ரஹ்மான் தனது குடும்பத்தாருடன் வெளிநாட்டிற்கு சென்றுள்ளார். அங்கும் கதிஜா புர்காவில் தான் இருக்கிறார். அங்கு ரஹ்மானின் பிள்ளைகள் மூன்று பேரும் சேர்ந்து புகைப்படத்திற்கு போஸ் கொடுத்துள்ளனர்.

அதில் அமீன் தன் அக்கா கதிஜாவுக்கு ஆதரவாக தன் கையால் முகத்தை மறைத்துக் கொண்டு நிற்கிறார். அந்த புகைப்படத்தை அமீன் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.


நான் புர்கா போடுவது பத்தி உங்ககிட்ட கேட்டேனா?: சர்ச்சை எழுத்தாளருக்கு ரஹ்மான் மகள் பொளேர்

அமீன் வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் கூறியிருப்பதாவது,

அப்பா மாதிரியே, சிரிச்சுக்கிட்டே பிள்ளைகளும் நெத்தியடி அடிக்கிறார்கள். அமீனுக்கு பாராட்டுக்கள். குடும்பமே தக் குடும்பமாக உள்ளது. சூப்பர்.

எழுத்தாளரை விளாசிய ஏ.ஆர். ரஹ்மான் மகள் நிஜத்தில் எப்படிப்பட்டவர் தெரியுமா?

ஒரு பெண் விரும்பிச் செய்வதை விமர்சிப்பவர்களுக்கு இப்படித் தான் பதிலடி கொடுக்க வேண்டும். இனி யாராவது கேள்வி கேட்பார்கள் என்று தெரிவித்துள்ளனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்