ஆப்நகரம்

ஆரவ்வின் புதிய படத்தில் நாயகியாக நடிக்கும் ஓவியா?!

நடிகர் ஆரவ் நடிக்கவுள்ள அடுத்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை ஓவியா நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

Samayam Tamil 28 Jul 2018, 6:42 pm
நடிகர் ஆரவ் நடிக்கவுள்ள அடுத்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை ஓவியா நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
Samayam Tamil ஆரவ்வின் புதிய படத்தில் நாயகியாக நடிக்கும் ஓவியா?!


பிக்பாஸ் சீசன் 1ல் வெற்றியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் நடிகர் ஆரவ். இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு இவருக்கு பட வாய்ப்பு அதிக வருகிறது. இந்நிலையில் பிக்பாஸ் முதல் சீசனில் ஆரவ் கலந்து கொண்ட போது, போட்டியாளர்களில் ஒருவரான நடிகை ஓவியாவை காதலிப்பது போல் நடந்து கொண்டு பின் காதலிக்கவில்லை என கூறினார்.

இதனை தொடர்ந்து பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய ஆரவ் மற்றும் ஓவியா தாய்லாந்த், மற்றும் சென்னையில் உள்ள மால்களில் இருவரும் ஒன்றாக சுற்றிய சில புகைப்படங்கள் வெளியானது.

மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்தவுடன், தன்னை தேடி வரும் பட வாய்ப்புகளையெல்லாம் ஏற்காமல் சிறந்த கதையை தேர்வு செய்ய காத்திருந்தார் ஆரவ். தற்போது நடிகர் ஆரவ் விஜய்ஸ்ரீ இயக்கத்தில் ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்கவுள்ளார். இவருக்கு ஜோடியாக நடிகை ஓவியாவிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்