ஆப்நகரம்

வலிமை படத்தில் நடிக்க மறுத்த அரவிந்த் சாமி? காரணம் இது தானம்...

அரவிந்த் சாமி வலிமை பட வாய்ப்பை வாய்ப்பை நிராகரித்த விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

Samayam Tamil 23 Nov 2019, 10:26 am
நேர்கொண்ட பார்வை படத்தை தொடர்ந்து மீண்டும் அஜித், ஹெச் வினோத் இயக்கத்தில் தனது 60வது படத்தில் நடிக்கிறார். வலிமை என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படத்தை போனி கபூர் தயாரிக்கிறார்.
Samayam Tamil வலிமை படத்தில் நடிக்க மறுத்த அரவிந்த் சாமி? காரணம் இது தானம்...
வலிமை படத்தில் நடிக்க மறுத்த அரவிந்த் சாமி? காரணம் இது தானம்...


இந்த நிலையில் வலிமை படத்தில் அரவிந்த் சாமி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க படக்குழு அவரை அணுகியுள்ளது. ஆனால் கதையைக் கூட கேட்காமல் வலிமை படத்தில் நடிக்க மறுத்துவிட்டாராம். தற்போது அரவிந்த் சாமி, மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றுப் படமான 'தலைவி' திரைப்படத்தில் எம்.ஜி.ஆர் கதாபாத்திரத்தில் பிஸியாக நடித்து வருவதால் இந்த வாய்ப்பை தவிர்த்து விட்டதாகக் கூறப்படுகிறது.

தலைவி படத்தில் நடிக்க மறுத்த வாரிசு நடிகர்

அஜித்துடன் நடிக்க பல நடிகர்கள் ஆர்வம் காட்டும் நிலையில், அரவிந்த் சாமி அந்த வாய்ப்பை மறுத்தது, ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக இதே போன்று எஸ்.ஜே.சூர்யா மற்றும் நஸ்ரியா இதில் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியானது. ஆனால் இருவரும் அந்த செய்திக்கு மறுப்பு தெரிவித்துவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

என்னை அறிந்தால் படத்திற்கு பிறகு அஜித் இதில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். சமீபத்தில் அஜித் இளமை தோற்றத்திலும், வேதாளம் பட தோற்றத்திலும் உள்ள புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தியது.

வீட்ல விசேஷமுங்க: முதல்வர், துணை முதல்வருக்கு அழைப்பிதழ் கொடுத்த சதீஷ்

மேலும் விஸ்வாசம் படத்தை தொடர்ந்து இதில் அஜித்துக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் படக்குழு இதை இன்னும் உறுதி செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்