ஆப்நகரம்

தீபாவளிக்கு முன்பே ”விஜய் 63” ரிலீஸ்? - தயாரிப்பாளர் அளித்த அதிரடி பதில்!

விஜய் நடிக்கும் 63வது திரைப்படத்தின் ரிலீஸ் தேதி விவகாரம் குறித்து, அப்படத்தின் தயாரிப்பாளர் பதில் அளித்துள்ளார்.

Samayam Tamil 26 Feb 2019, 8:46 pm
அட்லி இயக்கத்தில் 3வது முறையாக விஜய் நடித்து வருகிறார். தெறி, மெர்சல் படங்களின் பிரம்மாண்ட வெற்றியால், அட்லியின் புதிய படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.
Samayam Tamil Vijay


இன்னும் பெயரிடப்படாததால், ”விஜய் 63” என்ற பெயரில் குறிப்பிடப்பட்டு வருகிறது. இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க உள்ளார். இதில் நயன்தாரா, யோகி பாபு, கதிர், விவேக் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

கடந்த ஜனவரி மாதம் பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்கியது. வரும் தீபாவளிக்கு ”விஜய் 63” படம் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தீபாவளிக்கு முன்பே ”விஜய் 63” படம் திரைக்கு வரும் என்று செய்திகள் வெளியாகியிருந்தன.

இதுகுறித்து படத்தின் தயாரிப்பாளர் ஏஜிஎஸ் நிறுவனத்தின் சி.இ.ஓ அர்ச்சனா கல்பாதி கூறுகையில், தீபாவளிக்கு முன்பாக படம் வெளியாகும் என்பதில் உண்மையில்லை என தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்